தமிழ்நாடு பதிவுத்துறை பொதுஅதிகாரம், ஒப்பந்தம், அணைத்து முத்திரைத் தீர்வைக் கட்டணம் திடீர் உயர்வு
பொது அதிகார ஆவணம், ஒப்பந்தப் பதிவு ஆவணம் போன்றவற்றுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு பதிவுத்துறை உயர்த்தி அறிவித்திருக்கிறது.
பதிவு பிரமாணப்பத்திரம், பதிவு ஒப்பந்தப் பத்திரம், பதிவு பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பல்வேறு பதிவு செயல்பாடுகளுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு 2023 ஆம் வருடம் சட்டசபையில் உயர்த்தி அறிவித்திருந்த நிலையில்..
பத்திரப் பதிவு நில வழிகாட்டி மதிப்பு உயர்வு. பதிவுத்துறையின் உண்மை நிலவரம் இதுதான்
முத்திரைச் சட்டத்திலும் நிறைய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.. இந்தத் திருத்தங்கள் 2024 மே மாதம் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது..
முத்திரைத் தீர்வைக் கட்டணம்: அதன் அடிப்படையில், "தத்தெடுத்தல் பதிவுக்கு முன்பிருந்த ரூபாய்.100 முத்திரைத் தீர்வைக் கட்டணமானது தற்போது ரூபாய்.1000 ஆகவும், பிரமாணப்பத்திரம் பதிவு, உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய் .20 என்பது ரூபாய்.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சங்கப் பதிவுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.300 லிருந்து ஒவ்வொரு ரூபாய்.10 லட்சத்துக்கும் ரூபாய்.500 என்றும், கிரையப்பத்திரம் ரத்துப் பதிவுக்கு ரூபாய்.50 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூபாய். 20 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூபாய்.25 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரையப் பதிவு பத்திரமாகக் கருதப்பட்டு வழிகாட்டி நில மதிப்பில் 7 சதவீதக் கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ரூபாய்.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சங்கப் பதிவுக்கான ஒப்பந்தப் பதிவுக்கு ரூபாய். 200 அல்லது ரூபாய்.500 என இருந்த கட்டணம் ரூபாய்.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொரு பாகத்துக்குமான விற்பனை விலைச்சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்கு பாகப்பிரிவினை செய்யும்போது, அதிலொருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராகக் கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்தச் சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல, பங்குதாரர் பதிவுக்கான கட்டணமும் ரூபாய்.300-லிருந்து ரூபாய்.1000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. பொது அதிகார ஆவணப் பத்திரத்தில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்புப் பொது அதிகாரம், ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்புப் பொது அதிகார ஆவணத்துக்கு ரூபாய்.5 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.500 ஆக உயர்ந்துள்ளது..
தனிநபர்: 5 நபர்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணப் பதிவுப் பத்திரத்துக்கு முன்பிருந்த ரூபாய்.100 முத்திரைக் கட்டணம், தற்போது ரூபாய்.1000 ஆகவும், 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூபாய்.175-லிருந்து ரூபாய்.1000 ஆகவும் முத்திரைத் தீர்வைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அசையாச் சொத்துக்கள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்திற்கு சொத்தின் சந்தைமதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தி அமைக்கபட்டுள்ளது. அசையாச் சொத்துகள் விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்துக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.1000, குடும்பத்தினர் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து அடமானத்தைத் திரும்பப் பெறுவதற்கான முத்திரைத் தீர்வைக் க் கட்டணம் ரூபாய்.80-லிருந்து ரூபாய்.1000, பிணை பத்திரத்துக்கு ரூபாய்.80-லிருந்து ரூபாய்.500, செட்டில்மென்ட் ஆவணம் பதிவு திரும்பப் பெறுவதற்கு ரூபாய்.80-லிருந்து ரூபாய்.1000, குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.40 லிருந்து ரூபாய்.1000 என உயர்த்தப்பட்டுள்ளது. டிரஸ்ட் அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடமிருந்து மற்றொரு அறங்காவலர் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்யும்போது ரூபாய்.30 என்றிருந்த முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூபாய்.180 ஆக இருந்த முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.1000 என்றும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.120 லிருந்து ரூபாய்.1000 ஆகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வானது, பெருத்த அதிர்வலையை உண்டாக்குகிறது.. இந்த அளவுக்கு முத்திரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், வீடு நிலம் வாங்குபவர்களுக்கு சுமை மேலும் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, நேற்றைய தினமே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோள்: 'வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று வருகிறார்கள்.. எனவே, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தமிழ்நாடு மின்சாரக் கட்டணம் உயர்வும் தற்போது உள்ள நிலையும் பார்க்கலாம் புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.
500 யூனிட்க்கு கீழ்
யூனிட். ரேட். கட்டணம்
100. 0. 0.00
200. 2.25. 225.00
300. 4.50. 675.00
400. 4.50. 1,125.00
500. 6.00. 1,725.00
500 யுனிட்க்கு மேல்..
யூனிட். ரேட். கட்டணம்
510. 8.00. 2.030.00
600. 8.00. 2,750.00
700. 9.00. 3650.00
800. 9.00. 4,550.00
900. 10.00. 5,550.00
1000. 10.00. 6,550.00
1100. 11.00. 7,650.00
1100 யூனிட்க்கு மேல் யூனிட்டிற்கு ரூபாய் 11/- கட்டணம். நிலைக் கட்டணம், அட்வான்ஸ் தனி. 500 யூனிட்டிற்கும், 510 யூனிட்டிற்க்கும் வித்யாசம் ரூபாய் 305/- ஆகிறது.
ஒரு யூனிட் க்கு கட்டணமும் ரூபாய் 8,9,10,11 என கூடுகிறது.
கருத்துகள்