பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கேட்டு பவானி ரேவண்ணா தாக்கல் செய்த மனு
நேற்று முன்தினம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்ய, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி, பவானிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால், எந்தப் பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது எனும் தகவலில்லை. எனவே தனது கட்சிக்காரருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் செய்திருந்த
மனு, நேற்று முன்தினம் மீண்டும் நீதிபதி சந்தோஷ் கஜண்ணா பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது எஸ்.ஐ.டி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''விசாரணைக்கு ஆஜராகும்படி எந்த சம்மனும், மனுதாரருக்கு அனுப்பப்படவில்லை. முன்ஜாமின் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் வேண்டும். விசாரணையை வெள்ளிக்கிழமை ஒத்திவைக்க வேண்டும்,'' என வாதிட்டார். வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை நேற்று முன்தினம் நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரது நீதிமன்றக் காவல் ஜூன் மாதம் 06-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில். மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் பெண்ணைக் கடத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாரும், எச்.டி. ரேவண்ணாவின் மனைவியுமான பவானி ரேவண்ணா மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர். அவர் கைதாவதைத் தவிர்க்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பவானி ரேவண்ணா முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து பவானி ரேவண்ணாவும் கைதாகலாம் எனத் தெரிகிறது.
கருத்துகள்