2021 குடிமைப்பணி (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
2021 ஆம் ஆண்டு குடிமைப்பணி (மெயின்) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
"2021 ஆம் ஆண்டு குடிமைப்பணி (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான நேரத்தில், நாம் சுதந்திர அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் வேளையில், தங்களது நிர்வாகப் பணியைத் தொடங்கும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்."
"குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்களின் ஏமாற்றத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன், ஆனால் இவர்கள் எந்தத் துறையிலும் முத்திரை பதித்து இந்தியாவை பெருமைப்படுத்தக்கூடிய சிறந்த இளைஞர்கள் என்பதையும் நான் அறிவேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்