முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்சார வாகனங்களில் விலை குறைந்த ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், உருவாக்கியுள்ளனர்.


மின்சார வாகனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் (Lithium-Ion) பேட்டரிகளுக்கு மாற்றாக, எளிதில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த ஜிங்க்-ஏர் (Zinc-Air) பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்..

இந்த புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்க பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்.

இந்திய அரசின் சாதகமான கொள்கைகள் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றால் இந்திய மின்சாரத் துறை அண்மைக் காலமாக மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. 

மின்சார வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம்-அயன் பேட்டரிகளின் பெருமளவில் உற்பத்தி செய்யும் சீனா, மின்சார வாகன பேட்டரி உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது, இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் லித்தியம்-அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்கின்றன.

லித்தியம்-அயன் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு வரம்புகள் உள்ளன. தவிர, இந்திய சந்தையின் வெவ்வேறு தேவைகளை லித்தியம்-அயன் பேட்டரிகளால் மட்டுமே பூர்த்தி செய்துவிட முடியாது.

லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றான ஒன்றை, குறைந்த செலவில் உருவாக்கும் முயற்சியில் ஐ.ஐ.டி.மெட்ராஸ்-ன் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துத்தநாகம் பரவலாகக் கிடைக்கக் கூடியது என்பதால், ஜின்க்-ஏர் பேட்டரிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

எதிர்கால மாதிரி

தங்கள் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர். அரவிந்த் குமார் சந்திரன் கூறுகையில், "மின்சார வாகனங்களுக்கான ஜின்க்-ஏர் பேட்டரிகளுக்கு எதிர்கால மாதிரியை உருவாக்கும் பணியில் எங்கள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்வதற்கான வழிகளையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.  ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தற்போது ஜின்க்-ஏர் செல்களை உருவாக்கி, மின்சார வாகனங்களுக்கான ஜின்க்-ஏர் தொகுப்பாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

பெட்ரோல் நிலையங்களைப் போன்று, 'ஜின்க் ரீசார்ஜ் நிலையங்களை' தனியாக அமைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஜின்க்-ஏர் பேட்டரிகளைப் பயன்படுத்துவோர் பேட்டரி தீர்ந்துவிடும்போது, பெட்ரோல் மையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்வதைப் போன்று இந்த நிலையங்களுக்கு வந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

'பேட்டரி பரிமாற்றம்' என்ற அடிப்படையிலான தொழில்நுட்பத்தில், வாகன ஓட்டிகள் தங்களிடம் உள்ள 'ஜின்க் கேசட்'களுக்கு பதிலாக முழுவதும் ரீசார்ச் செய்யப்பட்ட 'ஜின்க் கேசட்'களை 'ஜின்க் ரீசார்ஜ் நிலையங்களில்' மாற்றிக் கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சங்களை விளக்கிய டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன் மேலும் கூறுகையில், "ஜின்க்-ஏர் பேட்டரிகளில் மிகப் பெரிய நன்மை உண்டு. ஏனெனில், லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது ஒட்டுமொத்த பேட்டரி தொகுப்பையும் அகற்றிவிட்டு, முழுமையான லித்தியம்-அயன் பேட்டரிகளை பரிமாற்றம் செய்ய வேண்டும். இதனால் லித்தியம்-அயன் பேட்டரிகளில் மூலதன முதலீடு இருமடங்காக அதிகரிக்கிறது" எனக் குறிப்பிட்டார்

பயன்படுத்தப்பட்ட 'ஜின்க் கேசட்'களை சூரியஒளித் தகடுகள் (solar panels) மூலம் ரீசார்ஜ் செய்யவும் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

இதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சி மாணவரான திரு. அகில் கொங்கரா கூறும்போது, "எங்கள் திட்டத்தின்படி மின்சார வாகனப் பயனாளர்கள் 'ஜின்க் கேசட்'களைப் பரிமாற்றம் செய்துகொள்ள 'ஜின்க் ரீசார்ஜ் நிலையங்களில்' சில நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டியிருக்கும்" என்றார்.

ஜின்க்-ஏர் பேட்டரிகள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் செயல்பாட்டு பாதுகாப்பு பற்றி ஐஐடி மெட்ராஸ்-ன் மற்றொரு ஆராய்ச்சி மாணவரான திரு. குஞ்சன் கபாடியா கூறுகையில், "இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜின்க்-ஏர் பேட்டரிகளில் நீரிய மின்பகுளி (aqueous electrolyte) இருப்பதால் மிகவும் பாதுகாப்பானவை. மின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும் மோசமான தருணங்களில் கூட இவை தீப்பிடிக்காது" என்றார்.

ஜின்க்-ஏர் பேட்டரிகளின் நன்மைகள் வருமாறு:

துத்தநாகம் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கக் கூடியது. லித்தியம்-அயன் பேட்டரிகளின் இறக்குமதியைக் குறைக்கும்.

லித்தியம்-அயன் பேட்டர்களோடு ஒப்பிடுகையில், துத்தநாகம் விலை குறைந்தது. லித்தியம்-அயன் பேட்டரிகளின் விலை 200 டாலர்கள் முதல் 250 டாலர்கள் ($200 to $250 a KWhr), ஆனால் ஜின்க்-ஏர் பேட்டரிகளின் விலை 150 டாலர்கள் ($150 KWhr). அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும்போது இதன் விலை 100 டாலருக்கும் கீழே ($100 KWhr) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜின்க்-ஏர் பேட்டரிகள் நீரின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை, நீண்ட ஆயுள் கொண்டவை

ஜின்க்-ஏர் பேட்டரிகள் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...