முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வீடியோ கான்பரன்சிங் மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் "நாட்டில் வந்தே பாரத் ரயில்களின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்துடன் தேசம் விகிஸ்ட் பாரத் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது" "விக்சித் பாரத் இலக்கை அடைய தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி அவசியம்" "தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) ஒரு எடுத்துக்காட்டு. நவீன ரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க் மற்றும் விமான சேவைகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன் நாட்டின் உள்கட்டமைப்பை மாற்றும் பிரதமர் கதிசக்தியின் தொலைநோக்கு" "வந்தே பாரத் இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலின் புதிய முகம்  மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 'மேக் இன் இந்தியா' மற்றும் ஆத்மநிர்பர் பாரத் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீரட்-லக்னோ, மதுரை-பெங்களூரு, மற்றும் சென்னை-நாகர்கோவில் ஆகிய மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயில்கள் உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும

மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுதில்லியில் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் இந்திய உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் முத்திரை மற்றும் நாணயத்தை வெளியிடுகிறார் “உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் - இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் அரசியலமைப்பு விழுமியங்களின் பயணம்! இது ஜனநாயக நாடாக பரிணமிக்கும் இந்தியாவின் பயணம்! “சுப்ரீம் கோர்ட்டின் 75 வருடங்கள் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் பெருமையை மேலும் அதிகரிக்கின்றன” “140 கோடி இந்திய குடிமக்கள் ஆசாதி கா அம்ரித் காலில் ஒரே ஒரு கனவு - விக்சித் பாரத், புதிய இந்தியா” “பாரதிய நியாய சன்ஹிதாவின் ஆவி 'குடிமகன்' முதலில், கண்ணியம் முதன்மை மற்றும் நீதி முதன்மை" வெளியிடப்பட்டது: புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்திய உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இர

தமிழ்நாடு முதல்வருக்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான பதில்

தமிழ்நாட்டின் கல்விக்காக நிதி ஒதுக்குமாறு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மத்திய மனிதவள மேம்பாட்டு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானுக்கு எழுதிய கடிதத்திற்கான பதில் வந்ததில். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று பி.எம்.ஶ்ரீ திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டாலே அடுத்த தவணைக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பதிலில் தெரிவித்துள்ளார் மத்தியக் கல்வித் துறையின் அமைச்சர். மாணவர் நலனா அல்லது முதல்வரின் கொள்கை ஈகோவா? இதில் எது வெற்றி பெறப்போகின்றது? என்பதே பலரது எதிர்பார்ப்பு பார்ப்போம்.கல்வி மேம்பாட்டுக்கான நிதியை விடுவிப்பதற்கான நிபந்தனையாக PM SHRI திட்டத்தில் கையெழுத்திடுமாறு மாநில அரசுகளை வற்புறுத்திய மத்திய அரசின் நடவடிக்கையை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்! நமது தனிப்பட்ட தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில், கல்விக் கொள்கை மாநில உரிமைக்கான விழுமியமாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்தக் கலாச்சாரம் மற்றும் பன்முகத் தன்மை வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் கல்வியின் கட்டமைப்பை மறுவரையறை செய்வது அந்தந்த மாநிலங்க

எஸ் ஆர் எம் கல்லூரியில் கஞ்சா போதைவஸ்து சோதனையில் 30 மாணவர்கள் கைது

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பச்சை முத்து உடையாருக்குப் பாத்தியப்பட்ட ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட எஸ்ஆர்எம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 காவலர்கள் அங்குள்ள விடுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தினர்  சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் பலருக்கும் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் அடிப்படையில் அங்கு 1000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் ஆண்கள், பெண்கள் விடுதிகளைத் தங்களது  கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதியான பொத்தேரி எனும் ஏரியையும், காட்டான் குளத்தூர்  எனும் குளதையும் சட்டவிரோத அரசாணை மீறல் செய்து கட்டப்பட்ட நிறுவனங்களாகும்  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பகுதி இங்கு எஸ்ஆர்எம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இங்கு பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்படுகின்றன. சிவாஜி திரைப்படத்தில் வரும் வில்லன் ஆதி கேசவன் போல மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சும

ஸ்ரீ கேதார்நாத் அருகில் உலங்கு வானூர்தி விபத்து

SDRF தகவல் படி , ​​"இன்று, காலையில் ஸ்ரீ கேதார்நாத் ஹெலி பேடில் இருந்து கோச்சார் ஹெலிபேடுக்கு மற்றொரு உலங்கு வானூர்தி (எ) ஹெலிகாப்டர் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பழுதடைந்த நிலையில், தாரு கேம்ப் அருகில் லிஞ்சோலி என்ற இடத்திலுள்ள ஆற்றில் விழுந்ததாக SDRF மீட்புக் குழுவினருக்கு காவல்துறை அஞ்சல் லிஞ்சோலி மூலம் தகவல் கிடைத்தது. SDRF குழுவினர் சம்பவம் நிகழ்ந்துள்ள இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் எம்ஐ-17 விமானம் மூலம் கௌச்சர் விமான ஓடுதளத்திற்கு பழுதுபார்க்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் விழுந்து நொறுங்கியது.  ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே கூறுகையில், "சனிக்கிழமை ஹெலிகாப்டரை கௌச்சர் விமான ஓடுதளத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது. எம் ஐ 17 விமானம், சிறிது தூரம் சென்றவுடன், ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக எம் ஐ -17 சமநிலையை இழக்கத் தொடங்கியது, இதன் காரணமாக ஹெலிகாப்டரை தாரு முகாம் அருகே இறக்கிவிட வ

பாஜக வில் எச் ராஜா தலைமையில் ஆறு நபர்கள் குழு மூன்று மாதங்களுக்கு நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்  அண்ணாமலை, உயர் கல்விக்கு  இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள்  நவம்பர் வரை படிக்க உள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பிலுள்ள அண்ணாமலை மூன்று மாதம்  அரசியலில் இடைவெளி விட்டதால் ,  தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளைக் கவனிக்க பாரதிய ஜனதா கட்சியின் தலைமை 6 நபர்கள் கமிட்டியை நியமித்தது. அதன் தலைவராக H.ராஜா வும் மற்றும்  M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாத காலத்திற்கு இந்தக் கமிட்டி கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை மண்டல வாரியாகப் பிரித்து செயலாற்றுவார்கள் என்றும், ஒவ்வொரு நபருக்கும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படுமென்றும்  யாருக்கு எந்த மண்டலம் என குழுத் தலைவர் H.ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமைத் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

முதல்வருக்கு நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்கா  சென்றுள்ள  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்தியத் துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும்  அமைச்சர் TRB ராஜா, நடிகர் நெப்போலியன் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலகின் முன்னணி  தொழில்  நிறுவனங்களான நோக்கியா, பெபால், ஈல்ட்  இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ராசிப், இன்பினிக்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய  6 நிறுவனங்களுடன் ரூபாய். 900 கோடி முதலீட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.  அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்குமிடையே ரூபாய். 250 கோடி முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைகடத்தி தொழி

சூத்திரம் 4 சிற்றூந்துப் பந்தயத்திற்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சூத்திரம் 4 சிற்றூந்துப் பந்தயத்திற்குத் (Formula 4 car racing) தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு, சென்னை போக்குவரத்துக்கு எந்தவிதமான இடையூறுமில்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோமீட்டர் தூரத்திற்கு சூத்திரம் 4 சிற்றூந்துப் பந்தயம். (Formula 4 car racing) நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த விசாரணையின் போது, ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விதித்த நிபந்தனைகளின் படி, ‘போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும்; பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது மேலும், FIA எனும் சர்வதேச மோட்டார் வாகனக் கூட்டமைப்பு சான்று பெற்ற பிறகே, சிற்றூத்துப் பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்டபொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்

ஏ.ஜி.நூரானி காலமானார்

ஏ.ஜி.நூரானி இன்று காலமானார் அவருக்கு வயது  93. அப்துல் கபூர் மஜித் நூரானி நமது காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர். எனது மாணவப் பருவம் முதல் அவரது எழுத்துகள் பிரபலம். அவர் எழுதியுள்ள பல நூல்களில்    The Kashmir Question (1964), Ministers’ Misconduct (1973), Constitutional Questions and Citizens’ Rights (2006), and The RSS: A Menace to India (2019)   குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றாசிரியரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஜி.நூரானி பத்திரிக்கையாளர், எழுத்தாளர், என பன்முக தன்மை கொண்ட நூரானி ஒரு எழுத்தாளராக,  இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றை குறித்து  பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ்: இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல், சவர்க்கரும் இந்துத்துவமும்  ஆகிய புத்தகங்கள் அவரது படைப்புகளாக உள்ளன. இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து ஆழமான ஆய்வுகளுடன் விவரிவாகவே எழுதியவர் ஆவார்.