முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொடைக்கானல் கீழ் குண்டாறு பகுதியில் புலியின் நடமாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் குண்டாறு பகுதியில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.கொடைக்கானல் கூக்கால் கீழ் குண்டாறு பகுதியில் நகராட்சி பொது குடிநீர் கிணறு உள்ளது அந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் ஒரு புலி நடந்து செல்வது பதிவானது. அதே போல வத்தலக்குண்டு சாலையில் உள்ள குருசரடி மயிலாடும்பாறை இடையே உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த புலி சாலையில் கடந்தது அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'' கீழ் குண்டாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். புலி நடமாட்டத்தை கண்டறிய டிராப் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன'' என்றார்.

நிலமோசடி துணை போன காவல் ஆய்வாளர் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சிபிஐ சோதனை

சென்னையில் நிலமோசடி செய்யும் திருட்டு அடாவடிக் குழுவினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு நில மோசடி அபகரிப்பு அக்கிரமப் பிரவேஷம் செய்ய முயன்றவர்களுக்குச், சாதகமாக கூலிக்கு லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு செயல்பட்ட அரசு பணியை நேர்மையாகச் செய்யாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ள காவல்துறை ஆய்வாளர் ஆனந்த்பாபு வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான நான்கு இடங்களில், சி.பி.ஐ., உயர் அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள் சென்னை சோழிங்கநல்லுார்   பகுதியில் வசிக்கும் கார்த்திக். என்பவருக்கு, அதே பகுதியில், 18.25 சென்ட் நிலம் இருந்துள்ளது. அதை, அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சரவணன், தேவன், சீனிவாசன் உள்ளிட்டோர், போலியான ஆவணங்கள் உற்பத்தி செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். அது குறித்து, ஆலந்துார் நீதிமன்றத்திலும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு  காவல்துறையிலும் தற்போது வழக்கு விசாரணை நிலுவையில்  உள்ளது. பிரச்னைக்குரிய இடத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என அரசு சுற்றறிக்கை உள்ளதால், கார்த்திக், நீலாங்கரை சார்  பதிவாளர் அலுவலகம், சோழிங்கநல்லுார்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையி

வேடசந்தூர் தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூபாய்.7,000 லஞ்சம் சர்வேயருடன் பெண் உதவியாளரும் கைது

திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூபாய்.7,000 லஞ்சம் சர்வேயருடன் பெண் உதவியாளரும் கைது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம் கண்ணு மேய்க்கிபட்டி சரண்யாவிடம் ஏழாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கரிகாலி பிர்க்கா சர்வேயர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார். கரிகாலி கிராமத்திலுள்ள பூர்விக நிலத்தை உட்பிரிவு செய்து, தந்தை பெயரில் பட்டா மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்த சரண்யாவிடம் பாரதிதாசன் லஞ்சம் கேட்கவே அதை கொடுக்க விருப்பம் இல்லாமல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார் பின்னர் அவர் பணத்துடன் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்றுள்ளார். தான் வெளியில் இருப்பதால், பணத்தை உதவியாளர் சுதாவிடம் கொடுக்கும் படி பாரதிதாசன் கூறியதையடுத்து பணத்தை வாங்கிய சுதாவையும், பாரதிதாசனையும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

வாரிசு சான்றிதழுக்கு ரூபாய்.15,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது

ஆன்லைன் மூலம் பதிவு செய்த வாரிசு சான்றிதழுக்கு ரூபாய்.15,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாளக்குடி நாராயணசாமி மகன் ரத்தினகுமார். என்பவரது மனைவி தேவியின் தந்தை ரவிச்சந்திரன் 2002 - ஆம் ஆண்டு காலமான. நிலையில், அவரது இறப்புச் சான்றிதழ் படி அவர் பெயரில் உள்ள சொத்துகளை பெயர் மாற்றம் செய்து பின்னர் விற்பதற்காக ரவிச்சந்திரனுக்கு  வாரிசுகள் இவர்கள் என விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கும் படி திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.8.2024 ஆம் தேதியன்று விண்ணப்பம் செய்தார். மறைந்த ரவிச்சந்திரன் வசித்த திருச்சிராப்பள்ளி பீமநகர் பகுதிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்று ஒரு வார காலம் கடந்தும் எந்த விதமான தகவலும் கிடைக்கப் பெறாதால் இரத்தினகுமார் அன்று மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்த

தலையெடுத்த மகாவிஷ்ணுவும், தலைமறைவு நித்தியானந்தாவும்

மாவட்டக் கல்வி அலுவலரிடம் உரிய அனுமதி பெற்றேன் என்றார் தலைமை ஆசிரியர். இப்போது மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன தண்டனை வழங்கலாம் ? அரசு அனுமதி இல்லாமல் இனி எந்த நிகழ்ச்சிகளும் அரசு பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும், கல்விக்குச் சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும்,  துறை சார்ந்த உடனடியான நடவடிக்கைகள் கடுமையானால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.  அமைச்சரவையும், பள்ளி கல்வித்துறையும் அதை சரிவரச் செய்ய வேண்டும், செய்யும் என நம்புகிற மக்கள் பலர் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் காலைக் கழுவுவதற்காகவா இலட்சங்களில் தனியார் பள்ளிகளில் மக்கள் பணம் கட்டுகிறோம்? இல்லையே. யார் அனுமதி தந்தார்கள்?   பிள்ளைகளை கட்டாயப்படுத்தி இது போன்று செய்யலாமா? அதற்கு முதலில்  பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடவடிக்கை செய்வார்கள்? இதுவும் அந்த சுற்றறிக்கையில் உள்ளதா ?  சென்னையில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேசிய மகாவிஷ்ணு என்ற இளைஞர் சொன்ன கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்