சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற சர்ஜன் வைஸ் அட்மிரல் கவிதா சஹாய், மருத்துவ சேவைகள் (கடற்படை) தலைமை இயக்குநராக 2024,அக்டோபர் 14 ஆம் தேதி அன்று பொறுப்பேற்றார். தற்போது கொடி அலுவலராக உள்ளவர், 1986, டிசம்பர் 30 அன்று ராணுவ மருத்துவப் பிரிவில் பணியில் சேர்ந்தார். புனேயில் உள்ள மதிப்புமிக்க ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், புது தில்லியில் உள்ள மதிப்புமிக்க எய்ம்ஸ் மருத்துவ மனையில் நோயியல் மற்றும் புற்றுநோயியலில் நிபுணத்துவம் பெற்றவர். ராணுவ மருத்துவப் படையின் கர்னல் கமாண்டன்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி இவர். மருத்துவக் கல்வியில் சிறப்பு ஆர்வம் கொண்டவர் இவருக்கு 2013-14-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்ஃபியாவில் உள்ள மருத்துவக் கல்வியின் முன்னேற்றத்திற்கான மதிப்புமிக்க சர்வதேச மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டது. இவரது சிறப்பான சேவையை அங்கீகரிப்பதற்காக, 2024-ஆம் ஆண்டில் சேனா பதக்கமும் 2018-ஆம் ஆண்டில் விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.
RNI:TNTAM/2013/50347