பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுவனுக்கு உதவ மனமின்றி இரக்கமற்று அரக்கனாக வாழும் சமூக நலத்துறையின் மாவட்ட அலுவலர் ,
குமுறும் தொண்டு நிறுவனங்கள் , பெரம்பலூர் மாவட்டம் குன்னம், வட்டம் கொளப்பாடி, ஊராட்சி மன்றம் காலனித் தெருவில் வசிக்கும் ஆனந்துக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள். மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மூத்த மகனான 14 வயதுச் சிறுவன் கண்ணனை பாலியல் கொடுமைப்படுத்தியதால் சிறுவன் கண்ணன், நண்பர்களிடம் தனக்கு நடக்கும் கொடுமைகளைச்சொல்லி அழுத நிலையில் . அவர்கள் "குழந்தைகள் பாதுகாப்பு" இலவச பொதுச் சேவைத் தொலைபேசி,(சைல்ட்
ஹெல்ப் லைன்) மூலம் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தைக் கூறிவே அவரைக் காவல்துறையினர், " POCSO " சட்டத்தில் கைது செய்து, சிறையிலடைத்தனர். சில நாட்களில் ஜாமீனில் வந்தவர். மீண்டும் பாலியல் கொடுமை செய்துள்ளார். அதனால் சிறுவன், வீட்டில் எலியை கொல்லும் விஷ "பேஸ்ட்டை வெறும் வயிற்றில் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் POCSO சட்டத்தின் கீழ். குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வரை உண்டு சிறுவன் கண்ணன், பாதிக்கப்பட்டதைத் தெரிந்து, ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். தற்சமயம் சிறுவன்கண்ணன்
உயிருக்கு போராடும் நிலையில், சிகிச்சையளித்த மருத்துவர், நல்ல மீண்டு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் தான், உறுதியாகக் கூற முடியும் என தெரிவித்துள்ளதாகவும் . தற்போதுது சுய நினைவு இல்லாமல் சிறுவன் கண்ணன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் , மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமையில் செயல்படும் "மாவட்ட சமூக நலத்துறை" மற்றும் "மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலகங்கள்" குழந்தைகள் நல காப்பகங்கள் நடத்தும் இல்லங்கள் மீது அக்கரை கொண்டு இதுபோல் பாதிக்கப்படும் சிறுவர்களைப் பாதுகாகாக்க வேண்டும் என்பதே சமூக நலனில் அக்கரை கொண்ட பலரது எதிர்பார்ப்பாகும்.
குழந்தைகள் நல காப்பகங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மிகுந்த அக்கரை காட்டாமல் இருப்பதே இதுபோண்ற சம்பவங்கள் பெருகக் காரணமாகிறது, தொடர்பான அலுவலர்கள் உதவி கொண்டு, 14 வயதுடைய கண்ணனை, ஆபத்திலிருந்து காப்பாத்தி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வைத்து ஆலோசனை வழங்கி, உயிர் பாதுகாப்பு வழங்கி இருக்கலாம். இச் சிறுவன் போல மாவட்டம் முழுவதும் (இருபால்) குழந்தைகளுடைய நிலைமை கேள்விக்குறியாவதாக
பெரம்பலூர் மாவட்டத்தில் இது போல, பல்வேறு கிராமங்களில் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு பலியாவதாக ஒரு சமூக ஆர்வலர் நம்மிடம் வருத்தம் தெரிவித்தார், நமக்கு விசாரணையில் கிடைத்த தகவல் படி மாவட்ட சமூக நல அலுவலர் பெரும்பாலான நாட்களில் அலுவலகத்தில இருப்பதல்ல எனபது தெரிகிறது, மேலும் சமூக நலனில் அக்கரையற்ற ஒரு சமூக நல அலுவலர் பெரம்பலூருக்குத் தேவையா என்பதும் இதற்கு முன் இருந்த அலுவலர்கள் இவர்போல சமூக நலனில் அக்கரை இல்லாமல் இல்லை என்பதும் நாம் பலரை விசாரித்து அறிந்த போது கிடைத்த தகவலாகும் இதை மாநில சமூக நலத்துறை கவணத்தில் கொள்ள வேண்டும் என்பதே இங்கு பொதுநீதி , பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற ஏழை எளிய (இருபால்) குழந்தைகள் குடும்பப் பராமரிப்பில்லாமல், திசைமாறி நாலா பக்கமும் இருக்க இருப்பிடமும், உண்ண உணவும், இல்லாமல் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் நிலை உள்ளது. பலரை வருத்தமடைய வைக்கிறது மாவட்டத்தில் "மாவட்ட சமூக நலத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம்" இருந்தும் முறையாக செயல்படாத காரணத்தால், சிறுவன் கண்ணனைப் போல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது. உடனே மாவட்ட நிர்வாகம், துரிதமாக , பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தைகள் காப்பகங்களைக் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் தொடர்பான அலுவலரிடம் குழந்தைகளின் பிரச்சனைகளைத் தெரிவித்து மூடி மறைக்காமல் செயல்பட்டு, கிராமங்களுக்கும் தொடர்பான அலுவலர்களுக்கும் "விழிப்புணர்வுப் பயிற்சி கொடுத்து, அரசு கவணமாகப் பணியாற்றி இது போல் பாதிக்கப்படும் குழந்தைகளை உரிய காப்பகங்கள் அமைத்துப் பாதிகாக்க வேண்டும்,
என்பதே! சமூக ஆர்வலர்களின் தற்போதய வேண்டுகோள். இது குறித்து நாம் இரண்டு முறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலரைத் தொடர்பு கொண்டு கேட்க முயன்றும் அலுவலகக் கண்காணிப்பாளரே நம்மிடம் பேசினார், மாவடட அலுவலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவே அறிந்தோம். ஆகவே பெரம்பலூர் பகுதிக்கு சமூக நலர்துறை செயல்பட ஒரு மக்கள் தொடர்பில் உள்ள நல்ல அலுவர் தான் முதல் தேவை என்பதே பகுதி மக்கள் எதிர் பார்ப்பாகும்.
கருத்துகள்