முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா

மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்திற்கு முன்பு சித்திரைத்


திருவிழாவிற்கு அழகர் மலையிலிருந்து வரும் கல்லழகர் இந்த ஊர் வழியாக வந்து தேனூர்க்கருகிலுள்ள வைகையாற்றில் இறங்கியிருக்கிறார். அழகர்கோயிலிலிருந்து வரும் அழகர் அந்த ஊரில் வைத்து அலங்காரம் செய்ததால் அலங்காரநல்லூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்பு இப்பெயர் மருவி ‘அலங்காநல்லூர்’ ஆகி விட்டது.


மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்றும், பாலமேட்டில் மாட்டுப்பொங்கலன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் யாருக்காக நடத்தப்படுகிறது தெரியுமா? இந்த ஊரின் காவல்தெய்வமான முனியாண்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது.



முனியாண்டி சேர நாடான மலையாளத்திலிருந்து மதுரைக்கு வந்த காவல் தெய்வம். மலையாளத்திலிருந்து முனியாண்டி சுவாமி ஒரு போர்க்காலத்தில்   ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட பெட்டி கரையொதுங்கிய இடம் தான்  அலங்காநல்லூர். அதைப் பார்த்தவரிடம் முனியாண்டி தான் இங்கேயே இருந்து மக்களைக் காப்பதாக கூறியிருக்கிறார். அவரை பெட்டியில் வைத்து பார்த்த குடும்பத்தினர் தான் இங்கு காலம்காலமாக பூசாரியாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற கதைதான் கருப்புசாமிக்கும் சொல்லப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக             தென் மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், அப்பகுதிகளில், முதலாவதாக சிங்கம்புணரி




சேவுகப்பெருமாள் அய்யணார் கோவில் மாடுகளும் சுவாமி மாடு எனும் கோவில் காளை என்று முதலாவாக அவிழ்த்து ஓட விடுவார்கள். அதை யாரும் பிடிக்க மாட்டார்கள் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக உள்ள மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடுகள் ஊர்மக்கள் மூலம் வெற்றிலை பாக்கு வைத்து மரியாதை நிமித்தம் அழைத்து வரப்படுவதால் அந்த ஐதீகம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அப்படி ஒரு ஐதீகம் உண்டு அந்தக்கோவில்  மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது அதன் விபரமாவது :

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டி என்ற  சொரிக்காம்பட்டி கருத்தமாயன் செல்வந்தரான நிலசயசுவான்தாரர். அவரது இளைய மகன்  அழகாத்தேவன் புஜபல பராக்கிரம இளைஞன். பொறுப்பில்லாமல் அவனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற பொறுப்பற்ற  நாடோடி. 



அழகாத்தேவனுக்கு திருமணம் செய்து விட்டால்  ஒழுங்காக இருப்பானென் ஊர் உறவுப் பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கத் தொடங்கினார்.

நாகமலைக்கு அருகில் கீழக்குயில்குடியில் வாழும் கருத்தமலை மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். 



கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதை யறிந்து ஊருக்கே விருந்தென தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார். 

அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளையும் அழகாத்தேவன் மஞ்சுவிரட்டில் அடக்கினால், திருமணத்திற்கு தான் ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கிறாள். 

இச் சவாலை ஏற்ற அழகாத்தேவனும் காளையை அடக்கும் மஞ்சுவிரட்டுக்கு ஒரு திருவிழாவில் நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வந்தது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மற்றும்   பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகள் அவிழ்க்கபடவே ஒவ்வொன்றாக எதிர்கொண்டு

மிகத் திறமையாக வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான் போராட்டத்தில் காளை அழகாத்தேவனின் வயிற்றில் குத்தியது. 



குடல் சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்குகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனைவாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்கச் சம்மதிக்கிறார். 

சுற்று வடடாரக் கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே எனும்  கோபத்தின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணைச் சரிக்கட்டி, அவனது உடம்பிலுள்ள காயத்தில்  விஷமேற்றிக் கொண்று விடுகிறார்கள்!!

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரவே, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கினர். 

கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பினர். அதன் பின்பாக 

கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இன்றுவரை வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. சுமார் 

நானூறு ஆண்டுகால ஒரு காதல் கதை கொண்ட  வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் வீரத் தழும்பா சுமந்து கொண்டிருக்கின்றன. சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்... தோட்டி மாயாண்டி காவல் நிற்க...அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்..ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்.

காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த இந்த வீர தீர பாராக்கிரம வரலாறு தான் ஜல்லிக்கட்டின் அலசங்ஙாநல்லூர் தோன்றல் தொடர்கிறது, மதுரை விஜயநகரப் பேரரசு காலகட்டத்தில் அதாவது 14-ஆம் நூற்றாண்டு)தான் ஏறுதழுவுதல் என்ற சொல் மாற்றம் பெற்று அது ஜல்லிக்கட்டு ஆனது என்பது  ஆய்வறிஞர்கள் கூற்று.

நாம் இன்னும் கொஞ்சம் முன்னால போயிடுவோம். அதுதான் சரியாவும் இருக்கும்.

நான்கு  வேதங்கள்ல பழமையானது ரிக்' வேதம்.  2300- வருஷமாகுது. ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மாடுபிடி விளையாட்டு-என அதிலெங்கும் காணோம்"இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு மலைத்  தலை வந்த மரையான் கதழ் விடை மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப வள இதழ்க் குழவியும் குறிஞ்சியும் குழைய நல ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை"

சிலப்பதிகாரம்   கூறுவதிது ரோமாபுரியின் ராட்சச கொலீசியத்தைப் பார்த்தவர்கள்  ஸ்பெயின் நாட்டின் காளை அடக்கும் போட்டி நடக்கும் பிரமாண்ட அரங்கத்தைப் பார்த்தவர்கள் 

 அலங்காநல்லூர் அருகில் கீழக்கரை அரங்கத்தையும் அண்ணாந்து பார்க்கலாம் ஆனால் அதில் அந்தக் கால வரலாறு பதிவாகுமா என்பது இங்கு எழுவினா?  தற்போது 23 ஆம் புலிக்கேசி திரைப்படக் கருத்தியல் போல அமைக்கப்பட்ட அரங்கம்  காளைகளுடன் காளையர்கள் மோதும் பிரமாண்ட விளையாட்டுப் பகுதி காளைகள் சீறி வரும் வாடி வாசல், அரண்மனை போன்ற  நுழைவாயில், நிர்வாக அலுவலகங்கள், மருத்துவப் பரிசோதனைக்கான அரங்கம், முதலுதவி மையம், பத்திரிக்கையாளருக்கான கேலரி, காளைகளைப் பதிவு செய்யும் மையம், உடை மாற்றும் அறைகள், பொருட்களை வைக்க பிரமாண்ட அறை, ஜல்லிக்கட்டு வரலாறு சொல்லும் மியூசியம், தற்காலிக விற்பணைக் கவுண்டர்கள், மழை நீர் வடிகால் வசதி, அழகிய நீரூற்று, செயற்கைப் புல்வெளி, 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விஐபி காலரி, பிரமாண்ட பார்வையாளர் காலரி,

கிட்டத்தட்ட 10,000 பேர்  ஜல்லிக்கட்டைப் பார்க்கும் வசதியுடன்  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது, தற்போது திறக்கப்படவுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...