முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்,               


        இது ஃபெர்சிய நாட்டிலிருந்து இந்தியாவின் மும்பையில் குடியேரியவர்கள் தான் பார்சிக்கள், அங்கு பல கார்ப்பரேட்டுகளின் கம்பெனி வழக்கறிஞர்கள் எல்லோரும் பார்சிக்கள் தான் அதில் ஐந்து கோடி ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்கள்  பலரும் அந்த இனக் குழுதான், அதில் முக்கியமானவர் மூத்த வழக்கறிஞர்  பாலி நரிமன் பரப்பன அஹ்ரஹார சிறையில் வாடிய முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை ஜாமீனில் .வெளிக் கொண்டு வந்தவர்.         பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்,  பிரபல சட்ட அறிஞரும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஃபாலி நாரிமன் இன்று காலை டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2007 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 1971 ஆம் ஆண்டு முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.  பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19 வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் அவர் பல முன்னணித் தலைவர்களின் வழக்குகளை வாதிட்டுள்ளார். அவர் மத்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரலாக மே மாதம் 1972 ஆம் ஆண்டு முதல்  ஜூன் மாதம் 1975 ஆம் ஆண்டு வரை இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை  இருந்தார்.

 அக்டோபர் மாதம் 17, 2014 அன்று, அவர் தமிழ்நாடு  முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்காக ஆஜராகி, அவருக்கு ஜாமீன் பெற்றார், அது முன்பு நிராகரிக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு  முதல்வராக பதவி வகித்த காலத்தில் மாதம் ரூபாய் 1 தான் ஊதியமாகப் பெற்ற. செல்வி ஜெ.ஜெயலலிதா. 5 ஆண்டு கால முடிவில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 66.65 கோடி சொத்துக்கள் குவித்ததாக ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன் , ஜெ.இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகாலமாக நடந்து வந்ததில்  2014 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன் , இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா. அத்துடன் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவே அதிரும் வகையில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார் மைக்கேல் டி.குன்ஹா.

இந்த வழக்கில் 22 நாட்கள் சிறையிலிருந்த ஜெ.ஜெயலலிதா அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ஃ பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஃபாலி நாரிமன் செய்த சிறப்பான வாதங்கள் ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

பாலி நாரிமன் மும்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், அந்த பதவியை அவர் மரணம் வரை தக்க வைத்துக் கொண்டார். இவரின் மகன் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் இன்னொரு மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல போபால் விஷவாயு பேரழிவு வழக்கில் யூனியன் கார்பைடுக்கு ஆதரவாக நாரிமன் வாதிட்டார், அதை அவர் சமீப காலங்களில் தவறு என்று ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...