காங்கிரஸ் பணம் ரூபாய்.64 கோடி பிடித்தம்'- வருமான வரித்துறை நடவடிக்கைக்கு பின்
"வங்கி கணக்கில் இருந்து ரூ.64 கோடி பிடித்தம் செய்யப்பட்டது காங்கிரஸின் செயல்பாடுகளை முடக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி செய்த சதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை, '2018, 19- ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் காலதாமதம் ஏற்பட்டிருந்ததற்கு அபராதமாக ரூபாய். 210 கோடியைச் செலுத்த வேண்டுமெனக் கூறி வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதால் .
இது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் கோபப்படச் செய்தது. காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், "காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நன்கொடையளிக்கும் வகையிலுள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் கணக்கு முடக்கம் மட்டுமல்ல, ஜனநாயகத்தை முடக்குவதற்குச் சமம். தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி, நாட்டில் ஒற்றைக் கட்சி ஆட்சி அமைக்கத் திட்டமா?. இதனால் செலவு செய்வதற்கும், பில்களை செட்டில் செய்வதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் நிதியில்லை.
மேலும் ராகுல் காந்தியின் ‘நியாய யாத்திரை’க்குச் செலவு செய்யக் கூட பணமில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அரசியல் செயல்பாடுகளும் பாதிக்கப்படுமென தெரிவித்திருந்தார். " `இது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல். பாரதிய ஜனதா கட்சி வசூலிக்கும், அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் கட்சிக்காக கஷ்டப்பட்டு திரட்டப்பட்ட எங்கள் நிதிக்கு சீல் வைக்கப்படும். இதனால் தான், எதிர்காலத்தில் தேர்தலே வராது எனக் கூறுகிறோம்" என ஆதங்கமாகத் தெரிவித்திருந்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே. இதே போல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "பிரதமர் மோடி பயப்பட வேண்டாம். காங்கிரஸ் என்பது பணப் பலத்தின் பெயர் அல்ல, மக்கள் பலத்தின் பெயர். நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரத்தின் முன் பணிந்ததில்லை. தலைவணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடுமென தெரிவித்திருந்தார்.
கருத்துகள்