வேளாண் தோழிகள் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூன் 18, 2024 அன்று வாரணாசியில் 30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் தோழிகள் (கிருஷி சகி)
சான்றிதழ்களை வழங்குவார். வேளாண்மையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்து, கிராமப்புற பெண்களின் திறன்களை மேலும் மேம்படுத்த, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை 30.08.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் லட்சிய முயற்சியாகும். வேளாண் தோழிகள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்:-
1. வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம் என்றால் என்ன?
'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தின் கீழ், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் தோழிகள் திட்டம், அதன் ஒரு பரிமாணம் ஆகும். வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், கிராமப்புற பெண்களுக்கு வேளாண் தோழிகளாக அதிகாரம் அளிப்பதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் தோழிகளுக்கு துணைத் தொழிலாளர்களாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் . "லட்சாதிபதி சகோதரி" திட்ட நோக்கத்துடன் இந்தச் சான்றிதழ் வகுப்பு இணைந்துள்ளது.
2. விவசாய துணைத் தொழிலாளர்களாக வேளாண் தோழிகள் தேர்வு செய்யப்படுவது ஏன்?
நம்பகமான சமூக வள நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் என்பதால் வேளாண் தோழிகள், விவசாய துணைத் தொழிலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விவசாய சமூகங்களில் அவர்களது ஆழமான செயல்பாடு, அவர்கள் வரவேற்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதி செய்கின்றன.
3. வேளாண் தோழிகளுக்கு என்ன வகையான பயிற்சி வழங்கப்படுகிறது?
வேளாண் தோழிகளுக்கு ஏற்கனவே 56 நாட்களுக்கு பல்வேறு சேவைகளில் பின்வரும் தொகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது:
1. நிலத்தைத் தயார் செய்வது முதல் அறுவடை வரை வேளாண் சூழலியல் சார்ந்த நடைமுறைகள்
2. உழவர் களப் பள்ளிகளை அமைத்தல்
3. விதை வங்கிகள் + ஸ்தாபனம் மற்றும் மேலாண்மை
4. மண் வளம், மண் மற்றும் ஈரப்பத பாதுகாப்பு நடைமுறைகள்
5. ஒருங்கிணைந்த பண்ணை முறைகள்
6. கால்நடை மேலாண்மையின் அடிப்படைகள்
7. உயிரி இடுபொருட்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு, உயிரி இடுபொருட்களின் விற்பனையகங்களை நிறுவுதல்
8. அடிப்படை தகவல்தொடர்பு திறன்
தற்போது, இந்த வேளாண் தோழிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்க முகமைகள் மூலம் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
4. பயிற்சிக்குப் பிறகு வேளாண் தோழிகளுக்கு என்ன வகையான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்?
பயிற்சியைத் தொடர்ந்து, வேளாண் தோழிகள் திறன் தேர்வு எழுதுவார்கள். தகுதி பெறுபவர்கள் துணைத் தொழிலாளர்களாக சான்றளிக்கப்படுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.
வ எண்
பிரிவின் பெயர்
செயல்பாடுகள்
செயல்பாடுகள் வாரியாக வேளாண் தோழி ஒருவருக்கான ஆண்டுக் கட்டணம்
1
ஐ.என்.எம் பிரிவு:
மண் வளம் மற்றும் எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் மண் மாதிரி சேகரிப்பு, மண்வள ஆலோசனை, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைத்தல், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல்
மண் வளம் =ரூ.1300
எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் (வடகிழக்கிற்கு மட்டும்) 54000
2
பயிர் பிரிவு
தொகுப்பான முன்னணி செயல் விளக்கம், வேளாண் செயல்திட்ட விவரங்களை சேகரித்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல்
ஆண்டுக்கு ரூ. 10,000
3
பயிர் காப்பீட்டுப் பிரிவு:
பி.எம்.எஃப்.பி.ஓய் கடன் பெறாத விவசாயிகளைத் திரட்டுதல், இழப்பு மதிப்பீடு
ஒரு வேளாண் தோழி ஆண்டுக்கு 20000 ரூபாய் சம்பாதிக்கலாம்
4
எம்.ஐ.டி.ஹெச் பிரிவு
தோட்டக்கலை இயக்கம் பற்றிய விழிப்புணர்வு
ஒரு வட்டாரத்தி்றகு ரூ. 40,000. செயல்பாடுகளின் எண்ணிக்கையில் 40000 ரூபாய் விநியோகத்தை மாநில அரசு முடிவு செய்யும்
5
என்.ஆர்.எம் பிரிவு:
மானாவாரி பகுதி மேம்பாடு, வேளாண் காடுகள் வளர்ப்பு, ஒரு துளி அதிக பயிர் காலநிலை நெகிழ்திறன் விவசாய செயல்முறை பயிற்சி, மரக்கன்றுகள் விநியோகம், நுண்ணீர் பாசனத்தை பின்பற்றுதல்
ஒரு வேளாண் தோழிக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய்
6
வேளாண் உள்கட்டமைப்பு நிதி
மக்கள் தொடர்பு முகவர், திட்டத்தை எளிதாக்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
ஆண்டுக்கு ரூ. 5000
7
விதை பிரிவு:
விதை கிராமத் திட்டம் ஒரு பயிற்சிக்கு ரூ. 900 என்ற அளவில் விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்
ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 900. மற்றவை உள்ளூர் பகுதியில் வேளாண் தோழியின் தேவைக்கேற்ப
8
எம் & டி பிரிவு:
வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம் செயல்விளக்க களத்திற்கு மூன்று முறை சென்று விவரங்கள், புகைப்படங்களை சேகரித்து க்ரிஷி மேப்பர் செயலியில் பதிவேற்றம் செய்தல்
ஆண்டுக்கு ரூ. 10000
9
எண்ணெய் வித்துகள் பிரிவு:
தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்/- எண்ணெய் வித்துகள் செயல்விளக்க களத்திற்கு மூன்று முறை சென்று விவரங்கள், புகைப்படங்களை சேகரித்து க்ரிஷி மேப்பர் செயலியில் பதிவேற்றம் செய்தல்
ஆண்டுக்கு ரூ. 3000
10
தாவர பாதுகாப்பு:
என்.பி.எஸ் என்.பி.எஸ்.எஸ். மூலம் பயிர் நிலை, பூச்சி கண்காணிப்பு பற்றிய தகவல்கள், புகைப்படங்களை சேகரித்தல், புகைப்படங்களை பதிவேற்றுதல்
ஆண்டுக்கு ரூ. 1000
11
கடன் பிரிவு:
கே.சி.சி முக்கிய இணைப்பு, கே.சி.சி விண்ணப்ப ஆதரவு, கடன் இணைப்பு
ஆண்டுக்கு ரூ. 5000
சராசரி வேளாண் தோழிகள் ஓராண்டில் ரூ. 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம்.
5. இதுவரை எத்தனை வேளாண் தோழிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது?
70,000 வேளாண் தோழிகளில், இதுவரை, 34,000 பேர் துணைத் தொழிலாளர்களாக சான்றளிக்கப்பட்டுள்ளனர்.
6. தற்போது, எந்த மாநிலங்களில் வேளாண் தோழி பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
வேளாண் தோழி பயிற்சித் திட்டம் முதல் கட்டமாக தமிழ்நாடு, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம்,மேகாலயா ஆகிய 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
7. எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி செய்வதன் மூலம் வேளாண் தோழிகள் எவ்வாறு வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள்?
தற்போது, எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் (வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை வேளாண் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம்) திட்டத்தின் கீழ், 30 வேளாண் தோழிகள் உள்ளூர் வள நிபுணராகப் பணிபுரிகின்றனர், பண்ணை நடவடிக்கைகளை கண்காணிக்கவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பண்ணைக்கும் ஒவ்வொரு மாதமும் வருகை தருகின்றனர். விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல், கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் குறிப்பேட்டை பராமரித்தல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு வாரமும் உழவர் ஆர்வக் குழு அளவிலான கூட்டங்களை நடத்துகின்றனர். குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4500 வழங்கப்படுகிறது.
கருத்துகள்