அமைச்சர்களாக அர்ஜூன் ராம் மெக்வால், பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா,ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பொறுப்பேற்றார்கள்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சராக திரு பூபேந்தர் யாதவ் பொறுப்பேற்றார்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சராக திரு பூபேந்தர் யாதவ் இன்று பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்க வருகை தந்தபோது, இத்துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் இணையமைச்சராக திரு கீர்த்திவர்தன் சிங்கும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு பூபேந்தர் யாதவ், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை போன்ற இயக்க முன்முயற்சிகள் மீது கவனம் செலுத்துவது தொடரும் என்றார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்பது மனம்போன போக்கில் நுகர்வு என்பதைவிட, மன நிறைவான நுகர்வு என்பதை பின்பற்றுவது என்று அவர் கூறினார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் திரு பூபேந்தர் யாதவ் ஆலோசனை நடத்தினார்.மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக திருமதி அன்னபூர்ணா தேவி இன்று பொறுப்பேற்றார்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக திருமதி அன்னபூர்ணா தேவி இன்று பொறுப்பேற்றார்.
இந்தத் துறையின் இணையமைச்சராக திருமதி சாவித்ரி தாக்கூர் பொறுப்பேற்றுக்கொண்டார்.மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் பொறுப்பேற்றார். இந்தத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே பொறுப்பேற்கும் நிகழ்வில் உடனிருந்தார்மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக டாக்டர் வீரேந்திர குமாரும், இணையமைச்சராக திரு ராம்தாஸ் அத்வாலேயும் பொறுப்பேற்றுக் கொண்டனர்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக டாக்டர் வீரேந்திர குமார் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இணையமைச்சராக திரு ராம்தாஸ் அத்வாலேயும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் இந்த அமைச்சகம் இதுவரை செய்துள்ள சாதனைகள் குறித்து இணையமைச்சர்களான திரு ராம்தாஸ் அத்வாலே, திரு பி எல் வர்மா ஆகியோருடன் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் விவாதித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்கால திட்டம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில், அமைச்சகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மெக்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மெக்வால் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் வழி நடத்தப்படுகின்ற தாம், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, முன்னுரிமை பணியாகும் என்று அவர் கூறினார். மேலும் நீதிமன்றங்களில் மக்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்