2024 ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 69,166 பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2024 ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் தீர்க்கப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 69,166 பேரின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஜூன் 1-15 தேதி வரையிலான காலகட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் 21,614 குறைகளுக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் 7,324 குறைகளுக்கும், நிதிச்சேவைகள் துறையின் 6,206 குறைகளுக்கும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் 2,890 குறைகளுக்கும் ரயில்வே அமைச்சகத்தின் 2,296 குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த துறைகள் குறைகளுக்கு தீர்வு காண்பதில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
கருத்துகள்