தமிழ் தேசியக் கூட்டணியின் முதுபெரும் தலைவர் ஆர். சம்பந்தன் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
தெரிவித்துள்ளார்
தமிழ் தேசியக் கூட்டணியின் முதுபெரும் தலைவர் ஆர். சம்பந்தன் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி, கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை ஏற்படுத்த ஆர்.சம்பந்தன் அயராது பாடுபட்டார் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்தத் தலைவர் ஆர்.சம்பந்தன் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிமையான நினைவுகளை எப்போதும் போற்றுவேன். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி, கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை ஏற்படுத்த அவர் அயராது பாடுபட்டார். இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.”
கருத்துகள்