கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்புக்குப் பிரதமர் பாராட்டு
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காகவும் அவருக்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டரான அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்புள்ள ரவீந்திர ஜடேஜா,
ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களது ஸ்டைலான ஸ்ட்ரோக் பிளே, ஸ்பின் மற்றும் அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக டி 20 கிரிக்கெட்டில் உற்சாகமாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களது அடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்."
கருத்துகள்