சாத்தான்குளம் சம்பவம்; சிபிஐ விசாரணை – முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு. கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக எழும் விவகாரத்தில் துணை ஆய்வாளர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர், "சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெ...
RNI:TNTAM/2013/50347