கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் திட்ட இயக்குனராக மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா இயக்குனர் பணி உயர்வு
கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணி உயர்வு காரணமாக தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் நொய்டாவுக்கு மாற்றமானார். அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்பதில் பல சந்தேகங்கள் கேட்டு திருத்தம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான அகழ்வாராய்ச்சியாகும். அதை சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்ட யாவற்றையும் முழுமையாகப் பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அனுப்பி வைத்தார்கள். மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதை வெளியிடாமலேயே காலம் கடத்தி தாமதித்து வைத்திருந்த உண்மை யாவரும் அறிந்ததே !. கீழடி அகழ்வாராய்ச்சியும் மிகவும் முக்கியமானது தான். தமிழரின் பயன்பாட்டுத் தொன்மையைச் மற்றும் கடந்து போன வாழ்...