முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணல் ஊழல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான பொதுத்துறைச் செயளாலர்

தமிழ்நாட்டில் மணல் எடுக்கும் அரசு புவியியல் சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் துறை சார்ந்த குவாரிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட மணல் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் (அது தான் உண்மை) புகார் எழுந்தது. நிர்ணயித்த அளவை விட கூடுதலாகவும் மணல் அள்ளப்படுகிறது (அதுவும் உண்மை)எனத் தெரிவித்து அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் நேரடியாக ஏற்கனவே சோதணை நடத்தியிருந்தது. தொடர்பாக பத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை யின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென் அமலாக்கத்துறையின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பொதுத் துறைச் செயலாளரால் வழக்குத் தொடரப்பட்டது அது தள்ளுபடியான நிலையில்  தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் கடுமையான கோபம் கொண்ட து , ஊழலைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்யாமல் ஊழலை ஊக்கப்படுத்துவது போல வழக்குப் போட்டதோடு அல்லாமல் அதில் தமிழ்நாடு அரசே மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது (குற்றமே) எனும் நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் 28...

வாழப்பாடியில் லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கிய வருவாய் ஆய்வாளர்.

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கிய வருவாய் ஆய்வாளர். சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கியுள்ளார்.   வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி பணி செய்கிறார்.  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பெரிய கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் நீர்பிடிப்பு ஓடைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அரசாணைகள் படி எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்திருந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் அந்த மனுவின் அடிப்படையில் ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற யோகேஸ்வரனிடம் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கின் உதவியாளர் முருகன் மணியின் மூலம் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் பொறி வைத்து  லஞ்சம் வாங்கும் போது சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர் முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், வருவாய் ஆய்வாளரை லஞ்சம் பெற...

புகார் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டுமென தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் மக்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டுமென தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தல். மேலும் புகார் மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். கோரிக்கை ஏற்பது சாத்தியமில்லை எனக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவருக்கு ஒரு மாதத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வும் காணப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு. தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் அரசு அலுவலகங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் குறைதீர் புகார் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மக்களிடமிருந்து புகார் கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டும்.புகார் மனுக்களின் மீதான முன்னேற்றம் குறித்து அவசியம். அவர்களுக்குத் தெரிவிப்பது நல்லது. மேலும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டால் அதுகுறித்து புகார் கொடுத்த ம...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வேண்டிய நபர்களின் வீடுகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக  பிரமுகரின் வீடுகளில் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொருளாளர் முருகானந்தம் வீட்டிலும் அவருடைய சகோதரர் பழனிவேல் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அரசு கட்டடங்களில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7 வாகனங்களில் 15 அமலாக்கத் துறை அலுவலர்கள் சென்னையிலிருந்து வந்தவர்கள் இன்று காலை 7.30 மணி முதல் புதுக்கோட்டையிலுள்ள முருகானந்தம் வீட்டிலும் கடுக்காகாட்டில் உள்ள முருகானந்தத்தின் சகோதரரும் அதிமுக நிர்வாகியுமான பழனிவேல் வீட்டிலும் ஆலங்குடியில் பழனிவேலுக்குச் சொந்தமான வேறு வீட்டிலும் சோதனைஞ நடத்தப்பட்டது. புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியில் பழனிவேல் (வயது 50) அதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலாளர். மற்றும் ஒப்பந்ததாரர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வேலுமணி, மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்  பாஜக முருகானந்தமும் சார்லஸ் நகரில் வசிக்கிறார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை(DRDA...

கடந்த 500 ஆண்டுகளாக சம்பல் பள்ளத்தாக்கில் நடக்கும் மோதல் நிகழ்வுகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலிலுள்ள ஜமா மஸ்ஜித் நிர்வாகக் குழு, நவம்பர் மாதம் 19 ஆம் தேதி மசூதியை சோதனை செய்ய உள்ளூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சம்பல் ஜமா மஸ்ஜித் மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது. சம்பல் பகுதி மசூதி குறித்த சர்ச்சை உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதியின் இரண்டாவது சோதனை அல்லது கணக்கெடுப்பை மேற்கொள்ள சர்வேயர்கள் குழு சந்தௌசி நகரை அடைந்த போது, ​​ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 24 ஆம் தேதி காலை கல் வீச்சுக்களும் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் அங்கு கலவரம் கட்டுக்கு வந்தது, இதில் பல உண்மை உள்ள கடந்த கால நிகழ்வுகள் குறித்த ஒரு தெளிவான பார்வை இதில் அவசியம் :-.  பொது ஆண்டு 1526 ல் மசூதி கட்டுவதற்காக ஒரு கோவிலை இடித்ததாகக் கூறப்பட்ட ஒரு மனுவை தாக்கல் செய்ததையடுத்து, உள்ளூர் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஆய்வுகள் குறித்த கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை சந்தௌசியில் உள்ள சிவில் நீதிமன்...

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மன்மோகனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்த கொலிஜியம் பரிந்துரை

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மன்மோகனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்த கொலிஜியம் பரிந்துரை செய்தது இந்தியத் தலைமை நீதிபதி  சஞ்சீவ் கண்ணா தலைமையில் நடந்த கொலீஜியம் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.  டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் இம் முடிவை எடுத்துள்ளது. நீதிபதி மன்மோகன் செப்டம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுகிறார். அதற்கு முன்பு, செப்டம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் அதன் தற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். அவர் டிசம்பர் மாதம்17 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தவர், 1987 ஆம் ஆண்டில் டெல்லியின் கேம்பஸ் லா சென்டரில் LL.B முடித்து அதே ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற...