முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோசடி செய்த நபருக்கு துணைபோய் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் வீட்டில் சோதனை

மோசடிப் பணத்தில் வாங்கிய சொத்தை ஏலம் விடாமலிருக்க இலஞ்சம் பெற்ற வழக்கில் துணை வட்டாட்சியர் வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மதுரை வடக்கு தாலுகா தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக  ஆர்.தனபாண்டி பணியாற்றினார் இவரது வீடு உத்தங்குடி பொன்மணி கார்டனில் உள்ளது.          இவர் 2021-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி பிரிவில் தலைமை உதவியாளர் மற்றும் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்து அதில் மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்ப கேட்டு பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூன்று நபர்கள் டான்பிட் நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில் பழனிச்சாமி, இளங்கோ ஆகியோருக்கு பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா மேலாண்மை இயக்குனர் ஜோசப் ஜெயராஜ் விற்பனை செய்த சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சொத்துக்களை பொது ஏலத்தில் விடும் பணியை அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை உதவிய...

தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஆளுனரைச் சந்தித்து மனு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி சந்தித்துப் பேசிய போது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்  என மூன்று கோரிக்கை கொண்ட மனுவை வழங்கினார். இந்த சந்திப்பின் போது விஜய்யுடன் கட்சி பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர். ஆளுநரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  மூன்று பக்க  அறிக்கையை வழங்கிய நிலையில் அதை வெளியிட்டுள்ளனர் மேற்கண்ட அறிக்கையில் : “இன்று (டிச.30) தவெக தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம். ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு: சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனு  அளித்தோம். எங்கள் மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்...

பாமக குடும்பச் சண்டைக்கு பின்னணி என்ன?

 தமிழ்நாடு என்னடா புறம்போக்கா? அதைத் தடுக்காமல் போகாது பாமக என முழங்கிய இயக்கம். இன்று குடும்பச் சண்டையில் அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குடும்பம் சார்ந்த மருத்துவர் அன்புமணி vs கோ.க.மணி மோதல் காரணமாக தந்தை மகன் இடையே வார்த்தை மோதல் கட்சி மோதலாகவே பொது வெளியில் வெடித்துள்ளது.  பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய 1988-89 காலத்திலிருந்து ஆண்டு தோறும் நடைபெறும் பொதுக்குழு டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் பதிவு அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகளின் படி வருடத்தின் கடைசியில் நடப்பது வழக்கம், கூட்டத்தில் இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸுக்கும் தலைவர் மருத்துவர் அன்புமணிக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்த நிகழ்வுகள் பின்னணியில் தான் அரசியல் சூழ்ச்சி நகர்வுகள் உள்ளது. மருத்துவர் அன்புமணியின்  சகோதரி காந்திமதிக்கும் பரசுராமனுக்கும் மகனாக நிறுவனரின் மகள் வழிப் பேரனாக முகுந்தன் இருந்தாலும் கட்சியில் சேர்ந்த நான்கு மாதங்களில் எப்படி முகுந்தனை தலைவராக்கலாமென மருத்துவர் அன்புமணி பொதுக்குழுவில் கேள்வி எழுப்பவே ?            ...

செவிலியர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் நடத்திய போராட்டம்

மரணத்தில் சந்தேகம் உள்ளதால் பிரேதப் பரிசோதனை முடித்து செவிலியர் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல். புதுக்கோட்டை மாவட்ட அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  செவிலியர்  மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகத் தெரிவித்து  பிரேதப் பரிசோதனை முடித்த அவரது உடலை வாங்க மறுத்து இறந்த பெண்னின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட் டம் வடகாடு அருகில் உள்ள கருக்காக்குறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ்  மகள் சௌமியா (வயது 20)  புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்னமோ நர்சிங் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து மாயமானது தொடர் பாக வடகாடு காவல் நிலையத்தில் அவர் தந்தை கொடுத்த புகாரில்  வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் அவரது விட்டின் அருகில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிரேதமாக மிதந்த மாணவியின் உடலை ஊர்மக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோத ணைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில்  அவரது மரணத்தில் சந்தேகமிருப...

இராஜபாளையம் காவல் நிலையத்தில் பாலியல் அத்துமீறல் செய்த எஸ் எஸ் ஐ பணிமாற்றம்

இராஜபாளையம் காவல் நிலையத்தில் பாலியல் அத்துமீறல் மது போதையில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பணியிடமாற்றம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகிலுள்ள தொம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 54). காவலராகப் பணியாற்றியவர் சமீபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்று இராஜ பாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பணி செய்கிறார். இராஜபாளையம் மலையடிப்பட்டி காவலர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப் பழக்கம் கொண்ட மோகன்ராஜ் பணியின்போதும் போதையில் இருந்துள்ளார். அன்றும் அதே போல் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு குடி போதையில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு வந்தவரை சக காவலர் மாடியிலுள்ள அறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றவர் தன்னுடன் பணியாற்றும் இளம் வயது பெண் காவலர் ஒருவரை நெருங்கி பேச்சு கொடுத்துள்ளார். போதையில் உளறியவரிடருந்து விலக நினைத்த பெண் காவலரை நெருங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர். மோகன்ராஜ் அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதால். அதிர்ச்சி அடைந்த பெ...

ஊடக சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. அண்ணா பல்கலை குற்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கரார் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச் சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் மற்றொரு நபரையும் குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணையை CBI க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று க...