முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்று அரசியலாக எழுந்து, ஏமாற்று அரசியலில் பலியான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மக்கள் தலைவராய் மாறும் இறுதி ஊர்வலம்

மாற்று அரசியலாக எழுந்து, ஏமாற்று அரசியலில் பலியான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 

எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு சினிமாவிலும், அரசியலும் ஈடுபட்ட விஜயகாந்த் சினிமாவில் மகத்தான வெற்றியும், அரசியலில் ஒரளவு வெற்றியும் பெற்றார்! சினிமாவில் அவர் தொட்ட உச்சமும், அரசியலில் அவர் தொட முடியாமல் போன உச்சத்தையும் ஆய்ந்தால் அவருக்கு நேர்ந்த துரோகம் குறித்து விவாதிக்க


 வேண்டிய நேரமிது, கேப்டன் என அழைக்க விஜயகாந்த் - 'விஜயராஜ் அழகர்சுவாமி' இயற்பெயர் கொண்டவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என அறியப்படும் 

பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சட்டசபையின் முன்னால் எதிரகட்சித்தலைவராகவும் இருந்த ஓர் அரசியல்வாதி



தூரத்து இடி முழக்கத்தில் துவங்கிய திரைப்பயணம் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக  அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150 க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டு  மக்களின் அன்பைப்பெற்றுப் பிரபலமானார். தெலுங்கு தாய்மொழியானபோதும் 

தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.குறிப்பிடப்படும் பிரபலங்களில்  ஒருவர். 

 "புரட்சி கலைஞர்' எனும் பட்டமுண்டு.

 மதுரையில் கே.என்.அழகர்சுவாமி நாயுடுவுக்கும்   மற்றும் ஆண்டாள் அம்மாளுக்கும்  மகனாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  25. ஆம் தேதியில் பிறந்தார். 





சகோதரி மருத்துவர் உடன்பிறந்தோர் பலர் இருந்தும், அரிசி ஆலை பணி மறந்து 

நடிப்புக் கலையில் அதிக ஆர்வம் கொண்டவர்,  திரை நடிகனாக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களைக் கடந்து 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார்.


1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியில் நடிகர் விஜயகாந்த், ராதிகாவைத் தான்  திருமணம் செய்வார் என ரசிகர்கள் நினைத்த நிலையில் பிரேமலதாவை  மதுரையில் திருமணம் செய்தார். 





இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சன்முகப் பாண்டியன் எனும் இரு மகன்களும் உள்ளனர். 




 இளைய மகன் 'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். 

இவர் 1979 ல் அகல் விளக்கு என்ற படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் அதே ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் நடித்துள்ளார்.


விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை தூக்கி காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து 'விஜயகாந்த்' என தனது பெயரினை மாற்றி அமைத்தார்.தேவகோட்டை தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி கால்பந்தாட்ட கேப்டன் தான் பின்னால் பிரபாகரன் பாத்திரம் மூலம் ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்பட்டார்.

தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானாலும், பின்னர் நாயகனாக தனது பயணத்தை தொடங்கினார். 

இவரது முன்னணி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்று தந்தது.

நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள்  அழுத்தமாக இருக்கும். 

ஊழல், திருட்டு லஞ்சம் என சட்ட விரோதச் செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.



விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான திரைக்கதையிழும், தேசப்பற்று படங்களாகவும் இருக்கிறது. 

இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 'புரட்சி கலைஞர்' என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் 'கேப்டன்' என்றே கேப்டன் பிரபாகரன் படம் வந்தது முதல் அழைத்தனர். 


100 வது படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.





இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி - தமிழ்நாடு அரசு . விஜயகாந்த்துக்கு கலைமாமணி விருது (2001), எம்.ஜி.ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009)  வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசால் 'சிறந்த குடிமகனுக்கான' விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த்  தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளார். 


பல கோடிகள் கடனில் உள்ள தென்னிந்திய  நடிகர் சங்கத்தினை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி  சங்கமாக உயர்த்தினார்.

நடிகர் விஜயகாந்த் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை மதுரையில்  தொடங்கி புகழ் பெற்றார். 

2006 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.



தமிழ்நாட்டின்  அரசியலில் விஜயகாந்த் இல்லாமல் வரலாறு எழுதமுடியாது கடந்த 18 ஆண்டுகால ஒரு  சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. முதல் 10 ஆண்டுகள் சென்னை தியாகராயநகர் ரோகினியில் தங்கிய காலம் முதல் அரசியல் களம் 13 ஆண்டுகள்  ஜெட் வேகம்.எடுத்தது முதல்  அடுத்த 5 ஆண்டுகள், மருந்தோடு போராட்டம்.



தமிழ்நாட்டு அரசியலில்  கலைஞர் மு. கருணாநிதி - செல்வி ஜெ.ஜெயலலிதா என இருவரையும் எதிர்த்தும் ஆதரித்தும் அரசியலில் ஈடுபட்ட ஒரே அரசியல் தலைவரான துணிச்சல் மிக்க நடிகர்.


எழும்பூர் பார்த்தசாரதி, நல்லதம்பி + ஏழு பேர் தவிர்த்து விஜயகாந்தால் உருவான சட்டமன்ற உறுப்பினர்கள் மா.பா.பாண்டியராஜன்,மைக்கேல் ராயப்பன், ஈரோடு சந்திரகுமார், நடிகர் அருன்பாண்டியன் என  யாருமே இப்போது அவரோடு இல்லை. 'தொகுதி சீரமைப்புக்காக- மக்கள்நலனுக்காக' அம்மாவைப் பார்க்கப் போனோம் என்று போனவர்கள் திரும்பவில்லை. அதோடு அவர்களின் அரசியல் வாழ்வும் அஸ்தமிக்கவே செய்தது,




சினிமாவுலகில் 54 புதிய டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர். பிலிம் இன்ஸ்டிடியூட் என்ற ஒன்று இருப்பதே நடிகர்  விஜயகாந்த் வாயிலாகத்தான் பலரும் அறிய முடிந்தது. ஆபாவாணன் அரவிந்தராஜ் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் விலிங்ஸ்டன் களைக்  கண்டெடுத்தது விஜயகாந்தின் ஊமைவிழிகள் படம் தான் துவக்கம் .

நான் நினைத்தது தான் சரி, என் கருத்து மட்டுமே சரி என்ற பிடிவாதம், பிரஸ் மீட்டுகளில் தொடர்ச்சியாக நடந்து கொண்ட விதம், ஆண்டவனோடு மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட  குழப்படி நிலைப்பாடு, குடும்ப அரசியலை எதிர்த்தவர் கட்சியிலேயே நுழைந்த குடும்பம் போன்றவை , விஜயகாந்தின் மனநிலை -உடல்நிலை இரண்டையும் ஒரு சேர போட்டுத் தாக்கியது - அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை.


நடிகராக மட்டும் இருந்திருந்தால் இதைப்பற்றி யாரும் வெளியில் பேசியிருக்க மாட்டார்கள். அரசியலுக்குள் வந்ததால், தன் கட்சி வேட்பாளரை மக்கள் மத்தியில் அடித்தது உள்ளிட்ட போலித்தனமில்லாத  இந்தப் பலஹீனங்கள் எல்லாம் முச்சந்தி வீதியில் போட்டு உடைக்கப் பட்டன. அதைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு நடிகர் விஜயகாந்த் இதயம் அத்தனை வலுவானதல்ல



சினிமாவில் அவர் தொட்ட உச்சம் என்பது வியக்கதக்க ஒன்றாகும். தமிழகத்தின் பிரபல இயக்குனர்களாக அறியப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்தினம் உள்ளிட்ட அனைவராலும் ஒருங்கே தவிர்க்கப்பட்ட புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், தானே பல புதிய இயக்குனர்களை திரையில் அறிமுகப்படுத்தி, தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கியவர்.


அது மட்டுமின்றி, பிரபல நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த் என்ற இரு பெரிய இமயங்களுக்கு இடையில் தனக்கென்று ஒரு ராஜபாட்டையை உருவாக்கி வீரநடை போட்டவர். கமலஹாசனையும், ரஜினிகாந்த்தையும் பட்டை தீட்ட மிகப் புகழ் பெற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள்  அணிவகுத்த நிலையில், அப்படியான வாய்ப்புகளின்றி சாதாரண இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் துணையுடன் இயங்கி முன்னணிக்கு வந்ததில் தான் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வெற்றியின் முக்கியக் காரணம், அவரை எளிய மனிதர்கள் தங்களில் ஒருவராகவே அடையாளம் கண்டனர்.


கடந்த தலைமுறை நடிகர்கள்  எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு, தான் சார்ந்த கலைக் குடும்பத்தின் நன்மைக்காக களத்தில் பாடுபட்டவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தான். ரஜினியும், கமலும் தங்கள் வளர்ச்சியைத் தவிர, வேறொன்றிலும் அக்கறை எடுத்துக் கொள்ளாத போது, நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டு, நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்ததோடு, அடித்தளத்தில் நலிந்த நிலையிலுள்ள கலைஞர்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு இயங்கியதில் தான் அவர் ‘கேப்டன்’ என்ற அடைமொழிக்கு பொருந்தியவரானார். தான தர்மங்கள் செய்ததில் அவர் உண்மையிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாரிசாகவே திகழ்ந்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை,. இவர் வாழ்ந்த காலகட்டத்தில் வேறெந்த நடிகரும் இவர் அளவுக்கு பரோபகாரங்கள் செய்ததில்லை.


புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின் அரசியல் ஈடுபாடு என்பது அவரது மாணவப் பருவத்திலேயே உருவானது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதில் உணர முடிகிறது. அந்த வகையில் இளம் வயத்தில் அவருக்கு திராவிட இயக்கங்களின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் பற்றும் இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் சான்றாகும். சினிமாவில் வெற்றி பெற்று வந்த போதே,  அவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும், அதில் ஈடுபடத்தக்க நிலையில், ஒரு வலுவான நடிகரை உள்வாங்கி கொள்ளத்தக்க நிலையில் திமுக இல்லை.

ஆகவே, அண்ணா தலைமையிலான திமுகவில் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பும், அரசியல் பயிற்சியும் நடிகர் விஜயகாந்திற்கு கிடைக்கதக்க நிலையில் அவர் காலத்து திமுக இல்லை. ஆகவே, ஜனநாயகத் தன்மையற்ற  அரசியல் கட்சிக்குள் நுழையாமல் தவிர்த்து விட்டார். ஆரம்பகாலத்தில் கருணாநிதி மீதிருந்த அதீத பற்று, அவருக்கு விழா எடுத்து தங்கப்பேனா வழங்கிய நிலையில் காலப்போக்கில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் ஒரு போதும் இணைய முடியாத நிலைக்கு அவரைத் தள்ளியது. திராவிட இயக்க ஈர்ப்பால் அரசியல் ஆர்வம் பெற்றவரால் அவரது மரணம் வரை திமுகவுடன் அரசியலில் கைகோர்க்க முடியவில்லை.


அவர் அரசியல் கட்சி தொடங்கிய 2005 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் கருணாநிதி மீதும், ஜெயலலிதா மீதும் மக்கள் நம்பிக்கை இழந்திருந்த காலம்! கட்சி தொடங்கி ஒரே ஆண்டுக்குள் சந்திக்க நேர்ந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலிலேயே அவரது கட்சி 8 சதவிகித வாக்கு வங்கியைப் பெற்றதே இதற்கு சாட்சி. அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக 10 சதவிகித வாக்கு வங்கியை நோக்கி நகர்நத போதிலும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தைத் தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், அவரிடம் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான செயல்திட்டம் எதுவும் அறவே இல்லை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே நான் எழுதி வந்தேன். கட்சியின் பெயரிலே குழப்பம். தேசியமா? திராவிடமா ? முற்போக்கா? என்பதில் தெளிவில்லை. தேசியம் என்றால், அதற்கு காங்கிரஸ், பாஜக என ஏற்கனவே கட்சிகள் உள்ளன! திராவிடம் என்றல், அதற்கு ஏற்கனவே திமுக, அதிமுக என்ற வலுவான கட்சிகள் உள்ளன! முற்போக்கு என்றால், அதற்கு இடதுசாரிகள் ஏற்கனவே உள்ளனர். இந்த வகையில் தான் தொடங்கியுள்ள கட்சியின் அடையாளம் என்ன? என்பதையே அவரால் தெளிவாக தீர்மானிக்க முடியவில்லை. இதனால், மக்களுக்கும், ‘இருக்கின்ற அரசியலுக்கு மாற்றான கட்சி இது’ என தீர்மானிக்க முடியவில்லை.



ஆயினும் கூட, ‘திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தி வரவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள் மெல்ல,மெல்ல தேமுதிகவை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், தனித்து போட்டியிட்டால் வெல்ல முடியாது என்ற நிலையில் இருந்த அதிமுகவை அரியணையில் ஏற்றும் நோக்கத்தில் அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு அடித்தளமிட்டார் பத்திரிகையாளர் சோ.

முதலில், ”இது எனக்கு சரிப்படாது” என நிராகரித்த விஜயகாந்தை மெல்ல, மெல்ல கரைத்து இரு தரப்பிலும் இடையறாது பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதிக்க வைத்தார் சோ. இந்த தேர்தலில் (2011) தேமுதிகவிற்கு 29 எம்.எல்.ஏ.சீட்டுகள் கிடைத்த போதிலும், அந்த கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்ததனால், தன் வாக்கு வங்கியில் ஒன்றரை சதவிகிதம் இழந்திருந்தது என்பதை அவர் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டார்!





அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவையும், பாமகவையும் கொண்ட ஒரு அணியை தமிழருவி மணியன் கட்டி எழுப்பிய போது, அதில் இணைந்ததில் அவரது வாக்கு வங்கி இன்னும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் முன்பு போல கணிசமான எம்.எல்.ஏக்களை பெறக் கூடிய வாய்ப்பு இருந்த நிலையில் கம்யூனிஸ்டுகள், மதிமுக, தமக..போன்ற சிறிய கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஏற்படுத்திய போது, தேமுதிகவின் வாக்குவங்கி இரண்டரை சதவிகிதமாக சரிந்தது. அதன் பிறகு முற்போக்கு தோற்றத்தை கழட்டி எறிந்துவிட்டு, பாஜகவுடன் நிரந்தரமாக தோழமை கொண்டது அவரது கட்சி. 2011 ஆம் ஆண்டிலேயே அவர் சிறிய கட்சிகளை அரவணைத்து தேர்தல் களம் கண்டிருந்தால், கணிசமான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து 2016 ல் ஆட்சிக்கே வந்திருக்கலாம்.






சினிமா பிரபலமும், துணிச்சலும் மட்டுமே அரசியலுக்கு போதாது. எதற்காக கட்சி? என்ன கொள்கை? என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அது விஜயகாந்திடம் இல்லாததால், இன்னொரு திமுக, அதிமுக போலவே தேமுதிகவும் இருக்கும் எனும் போது, தேமுதிகவுக்கான தேவை இல்லாமல் போய்விட்டது. மாற்று அரசியலுக்கான கட்சியாக பார்க்கப்பட்ட தேமுதிக ஏமாற்று அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது!






சட்டமன்ற எதிர்கட்சி அந்தஸ்த்து  கிடைத்த போது, கேபினெட் அமைச்சருக்கான அங்கீகாரம், அரசாங்க முத்திரை பதித்த கார் ஆகியவற்றில் பவனி வந்த போது அதிகார அரசியலுக்கு பலியாகிவிட்டார். தன் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆறுபேரை ஜெயலலிதா தூக்கிய போது இவர் கோர்ட்டுக்கு போய் ஓடுகாலிகளின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க செய்திருக்க வேண்டும். அந்த துணிச்சலான நடவடிக்கையை அவர் தவிர்த்து, தன்னுடைய எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து பறி போகக் கூடாது என அமைதி காத்தார். சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து போனால் என்ன? மக்கள் மன்றத்தின் அங்கீகாரமே எனக்கு முக்கியம் என இயங்கி இருந்தால் கூட அவர் வளர்ச்சி மேல் நோக்கி சென்று இருக்க கூடும்.தனிநபர் துதி, கட்சிக்குள் ஜனநாயக மறுப்பு, ஜெயலலிதா போல ஒன்மேன் ஷோ, கருணாநிதி போல குடும்ப அரசியல், கட்சி பதவிகளுக்கே அவர் மனைவி கட்சிகாரர்களிடம் பணம் பெற்ற அவலம் என அதிமுக, திமுகவில் உள்ள அனைத்து சீர்கேடுகளும் தேமுதிகவில் அரங்கேறின.  கட்சி நிர்வாகிகளை விஜயகாந்த் குடும்பத்தினர் கையாண்ட விதம், அவரை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தனிமைப்படுத்தியது. மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த இளம் தலைமுறைக்கு அங்கு இடமில்லாமல் போனது. இவை தாம் தேமுதிக தேய்பிறையானதற்கு முக்கிய காரணங்களாகி விட்டன





வருங்காலத்தில் அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களுக்கு விஜயகாந்தின் அரசியல் எழுச்சியும், தோல்வியும் ஒரு பாடமாக அமையட்டும். போதுமான அரசியல் பயிற்சியோ, கொள்கை, சித்தாந்தமோ எதுவுமின்றி, சினிமா பின்புலத்தில் இருந்து வருபவர்களை நம்பக் கூடாது என்பதை சமூகத்திற்கான பாடமாகவும் விஜயகாந்த் விட்டுச் சென்றுள்ளார்.                    தீவுத்திடலில் பொதுமக்களுக்கு 100 மீட்டர் சாமியானா பந்தல், உள்ளே 2000 இருக்கைகள்.

விவிஐபிகள்  அமர தனியான இடம்  பத்திரிக்கையாளர்களுக்குத் தனி இடம்..

- 3000 காவலர்கள்  பாதுகாப்புப் பணியில் 

 பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள்

- வரிசையாக்ச் செல்ல வசதி,

ஒரே இரவில் இதையெல்லாம் தீவுத்திடலில் அமைத்திட்ட தமிழ்நாடு அரசிற்கு விஜயகாந்த் ரசிகர்கள் நன்றிகளை இணையத்தில் பகிர்ந்தார்கள்..

ஒரே முறை எதிர்கட்சியா தலைவராக இருந்தவருக்கு திமுக அரசு கொடுக்கும் மரியாதை இது.





5 முறை முதல்வராக இருந்த கலைஞர் மறைவில் அநாகரீக அரசியல் செய்து, சரியான பாதுகாப்பு கொடுக்க துப்பில்லாமல் தலைவர்களை தள்ளுமுள்ளில் சிக்க வைத்து அவதிக்குள்ளாக்கிய அப்போதய முதல்வர்  எடப்பாடி கே பழனிசாமியும் தற்போது அதன் காரணமாகப் அதிகம் பேசப்படுகிறார்.தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள விஜயகாந்தின் மக்கள் சேவையை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஓர் அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு நிரப்பமுடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. எனது நெருங்கிய நண்பராக அவர் திகழ்ந்தார். பல ஆண்டுகளாக அவருடன் நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி." எனத் தெரிவித்துள்ளார்.              நடிகர்கள் பாராட்டு விழா மேடையில் கலைஞர் மு.கருணாநிதி முன்னிலையில் நடிகர் விஜயகாந்த்  பயமில்லாமல் ஒரு தொலைக்காட்சியின்  போக்கைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசி முடித்தார் கேட்டுக்கொண்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி தன் பேரன்கள் முன்பே நடிகர் விஜயகாந்த் தன்னை அவமதிக்கிறார் எனக் கோபம் கொண்டு விஜயகாந்தைப் பற்றி தகவல் தருமாறு அப்போதய அமைச்சர் சகாக்களுக்குத் தெரிவித்த போது TR பாலு விஜயகாந்த் திருமண மண்டபத்தைப் பற்றி காதில் போடவே





போக்குவரத்து மற்றும் கப்பல் துறையைச்  சேர்ந்த பாலு அமைச்சராக இருந்த நிலையில் கூவமருகில் பாலம் கட்ட திருமண மண்டபம் பாதி இடிக்கபடுவதாக நடிகர் விஜயகாந்துக்கு கடிதம் துறை ரீதியாக அனுப்புகிறார்கள்




பலர் எதிர்ப்பையும் மீறி பாதி மண்டபம்  இடிக்கப்படுகிறது 

இழப்பீடாக எட்டு கோடி மட்டுமே தரும் நிலை வந்தது,

அப்போது தான் நடிகர் விஜயகாந்த் கோபமானார் 

நமக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என அவர் சிந்தனை  அப்போது அரசியல் அதிகாரம் பற்றி அறிகிறார்

தனது மண்டபத்தை பழி வாங்கும் நோக்கில் தான் அரசியல் பலத்தால் இடித்துள்ளார்கள் 

அதே அரசியலைக் கையிலெடுத்துத் தான்  திமுகவை வீழ்த்த தனது லட்சியமாக கட்சி ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார்






அதில் கோபமுற்ற கலைஞர் மு.கருணாநிதி பல முறை நடிகர் விஜயகாந்துக்கு பல துன்பங்களைத் தந்தாக அந்தக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் இன்றும் பேசும் நிலை

அதை எல்லாம் தொண்டர்கள் ஆதரவோடு எதிர்கொண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என கட்சியையும் கொடியையும் மதுரையில் அறிமுகப்படுத்துகிறார்

பின்னர் தேர்தல் களத்தில் திமுகவை மூன்றாமிடம் தள்ளி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது

எந்த அரசியல் அதிகாரத்தை வைத்து  பழிவாங்கினார்களோ அதே ஆயுதத்தைக் கையிலெடுத்து  விரட்டத் தொடங்கினார்.. என்பது கடந்த கால வரலாறு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த