ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அல்லாத மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி குஜராத், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற தலைமைப் பதவிகளில் பதவி உயர்வால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள்: 1. குஜராத் - சோட்டா உதய்பூர், அகமதாபாத் கிராமப்புற மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர் 2. பஞ்சாப் - பதான்கோட், பாசில்கா, ஜலந்தர் கிராமப்புற மற்றும் மலேர்கோட்லா மாவட்டங்களின் சிறப்புக் காவல்துறை கண்காணிப்பாளர். 3. ஒடிசா - தென்கனல் மாவட்ட ஆட்சியர் மற்ற...
RNI:TNTAM/2013/50347