தமிழ் நாட்டில் 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் மோதல்
பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதன் படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.
புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐஜேகே ) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
பாஜக அணியிலுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
பத்துத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டி காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழ் மாநில கா ங்கிரஸுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அமமுகவுக்கு திருச்சிராப்பள்ளி, தேனி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் பாமக வேட்பாளர்களும்அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல் தொகுதியில் பொருளாளர் திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலுவும் போட்டி
தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவில்லை.
வேட்பாளர்களாக
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்,
மயிலாடுதுறை - ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி - அரசாங்கம்,
சேலம் - ந. அண்ணாதுரை,
விழுப்புரம் - முரளி சங்கர்,
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸின் மனைவி மருத்துவர் சௌமியா போட்டியிடுகிறார்,பாஜக தேசிய கட்சி, கூட்டணி கட்சிக்கு ராஜ்யசபா எம்பி தருகிறார்கள் என தெரிந்தால் இதே அணுகுமுறையை மற்ற கூட்டணி கட்சியினரும் கேட்பார்கள். அதனால் பாஜகவுக்கு நெருக்கடிகள் எழக் கூடும். எனவே அதை ஆவணங்களாகப் பதிவு செய்ய பாஜக விரும்பவில்லை.
பொதுவாக கூட்டணி ஒப்பந்தம் என்பது அந்தந்த நாளில் ராகு காலம், எமகண்டம் பார்த்து நல்ல நேரத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ கையெழுத்தாகும். ஆனால் பாமக - பாஜக கூட்டணியை பொருத்தமட்டில் காலையிலேயே கையெழுத்தாகியது குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் அந்த காலங்களில் பாமக கூட்டணி என்றாலே அது பெரிய விஷயமாக இருக்கும். எல்லா ஊடகங்களின் கவனமும் பாமக மீது இருக்கும். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தை கூட பாமக. தான் நிர்ணயிக்கும். ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதே அவர்கள் நெருக்கடியான சூழலில் தான் செய்திருக்கிறார்கள்.
சேலத்தில் நடக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர்கள் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பாஜக தலைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில் தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்தும் அவசர அவசரமாக பெறப்பட்டது. அந்த அளவுக்கு பாமக மீது நிர்பந்தம் இருக்கிறது.
ஒரு அழுத்தம் இல்லால் பாமக இந்தக் கூட்டணியை இறுதி செய்திருக்க மாட்டார்கள். வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னர் வரை கூட எந்தக் கூட்டணிக்குப் போனால் பாமகவுக்கு நன்மை என்பதை யோசித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த முறை பாமகவுக்கு ஒரு அழுத்தம் என்பது கூடுதலாக உள்ளது. நிறைய உத்தரவாதங்களும் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட பாமக நிர்வாகிகள் யாரும் உற்சாகமாக இல்லை. இன்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவில்லை, அன்புமணி மட்டுமே வந்திருந்தார். கூட்டணி ஒப்பந்தங்கள் சென்னையில் தான்
அதிமுக கூட்டணி எனப் பார்த்தால் அங்கு சிறிய சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இதனால் தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. எனவே பாமக, அதிமுக கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம் என பாமக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விட அதிர்ச்சி, அன்று காலையிலேயே பாஜக- பாமக கூட்டணி கையெழுத்தாகியது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில்
இந்த ஒப்பந்த கையெழுத்தின் போது பாஜகவை சேர்ந்த மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். எனவே பாமகவுக்கு ஏதாவது வாய்மொழி உத்தரவாதம் கிடைத்திருக்கும் என்றே தெரிகிறது என்றனர். முதல் முறையாக என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பிரதமர் வரும் போதே கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையில் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு தமிழக பாஜகவுக்கு இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்திருந்தார். அதிமுக நிலை தான் வித்தியாசமானது திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன் (சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர், ஜெயலலிதாவிற்கு எதிராக திமுக சார்பில் களம் கண்டவர்)
மதுரை டாக்டர் - P.சரவணன் ( திமுக -பாஜக - திமுக - அதிமுக என்று மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சி மாறி வந்தவர்)
ஈரோடு - ஆற்றல் அசோக் குமார் ( சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர் பாஜக மொடக்குறிச்சி MLA-வின் மருமகன் பாஜக அதிமுக கூட்டணி இருக்கும் என்றும் பாஜகவில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் பேரம்பேசி சீட்டு உறுதியளிக்கப்பட்டதால் அதிமுகவில் இணைந்தவர் )
திருச்சி - கருப்பையா ( மணல் மாபியா விவகாரத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் கரிகாலனின் சகோதரர் )
கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், வேட்பாளர் ஆக்கப்பட்டால் கட்சிக்கு வருகிறேன் என்று பேரம்பேசி வந்தவர்களை வேட்பாளராக்கினால் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்களா? சீட்டை உறுதிசெய்து கொண்டு கட்சிக்கு வருபவர்களால் கட்சிக்கு என்ன பலன்? அப்படி இவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர்களும் அல்ல. அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளில் கட்சிக்கு விசுவாசமானவர்கள் வேறு யாரும் இல்லையா? என்று வினா எழுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியின் இறுதிச்சுற்று - கடைசிச் சொட்டு தேநீரை உறிஞ்சுகிற நொடிகளில் இருக்கிறது.
தேர்தலில் கூட்டணி சேர்ப்பில் தமாகாவுக்கு பெரிய ரோல் உள்ளது.
"எடப்பாடி கே. பழனிசாமியை பார்த்துப் பேசிவிட்டேன். பாஜக அண்ணாமலையிடம் போனில் பேசி விட்டேன். நாளை பாமக அன்புமணியை சந்திக்கிறேன். அதிமுகவும் பாஜகவும் இணைந்தால் தான் பொது எதிரியை வீழ்த்த முடியும்" - என்று வேகம் காட்டினார் ஜிகேவாசன்.
பாஜக- அதிமுக கூட்டணி விவகாரத்தை ஜிகேவாசன் தான் முதலில் பூடகமாக வெளியில் சொன்னவர். செய்தியாகவும் மாறியவர். பின்னர் பாஜக பக்கமிருந்து எதிர்வினை வரவே, அவர் கருத்துக்கே எதிர்கருத்தை சொல்லி வந்தார்.
"பாமக அன்புமணி ராமதாஸ் நேரடியாக ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டு அப்படியே மத்திய அமைச்சர் ஆகிறார்கள்" - என்கிற தகவலும் அந்தக் கட்சி வட்டார நம்பிக்கையாக இருக்கிறது.
இதைக் கேட்டதும் பலர், சிரித்து வைக்கலாம். பல நேரங்களில் இப்படிப்பட்ட சிரிப்புகள் இடம் மாறிப் போவது தான் காலத்தின் கைவண்ணம்.
பாஜகவை நேற்றுவரை எதிர்த்த அதிமுக முன்னணித் தலைவர் டி.ஜெயகுமார், "தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்" என்று சொல்லியிருப்பதை, ஜிகேவாசன் ட்ராக்கிலேயே கொஞ்ச தூரத்துக்கு ஓடிப் போய் பார்த்து புரிந்திட தேவை இல்லை.
இப்போது தனியாக நிற்கிறோம். 2026- ல் உங்களோடு கைகோக்கிறோம் - என்று பாஜகவிடம் அதிமுக சொல்வதாக வைத்துக் கொண்டாலும் " 2024 ஆம் ஆண்டை மட்டும் பேசுங்கள். 2026- ஆம் ஆண்டை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றுதான் பாஜக சொல்லும்.
பெரிய பிம்பத்தை கட்டமைத்து வெளியில் காட்டிக் கொண்டாலும் அதிமுகவைத் தவிர்த்து பாஜகவுக்கு கூட்டணி அமைக்க வேறு வழி இல்லை.
தேர்தல் நேரமாச்சேன்னு
டிவி பாத்தது குற்றம்.
பத்து ஆண்டுகள் பாஜகவோடு டிராவலிலிருந்த புதியதமிழகம், இப்போது பாஜகவை விட்டு விலகியது ஏன்? - என்ற கேள்வி
கேட்டது நெறியாளர்- சன் நியூஸ் எடிட்டர் மு.குணசேகரன்.
"திமுக ஆட்சிக்கு வந்தநாள் முதல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல்" - என்று புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, பிராட்கேஜ் ஏரியாவில் 'பதில்' ரயிலை
ஓட்ட ஆரம்பித்து விட்டார்...
"சப்ஜெக்டுக்குள்ள வாங்க டாக்டர் சார்" என்று நெறியாளராய் குணசேகரன், டாக்டர் கிருஷ்ணசாமியை 'கேட்' டுக்குள் வரச் சொன்னார்.
ஆனால்....
" நீங்க திமுகவின் Representative ஆக பேசக்கூடாது. நீங்க சன் டிவி லேபர்.
என்னைப் பேசவிடுங்க. என் கருத்தை சொல்ல விடுங்க.
நீங்க திமுகவுக்கு இவ்வளவு 'முட்டு' கொடுக்கக் கூடாது. நீங்க திமுககாரரா? பத்திரிகையாளரான்னு தெரியலயே" என்று பு.த. தலைவர் கிருஷ்ணசாமி டாக்டர் தொடர...
இப்படியான வார்த்தைகளை கையாள்வது உங்களுக்கு அழகல்ல, அது தவறு என்று குணசேகரன் சொல்லச் சொல்ல
தொடர்ந்து அதே தொனியில்
டாக்டர் கிருஷ்ணசாமி பேசப் பேச
பின்னர் டாக்டர் கோபத்துடன் காதில் மாட்டியிருந்த 'கிளிப்' பை நீக்கிவிட்டு வீடியோ கால் பேட்டியை முடித்துக் கொண்டார். இது பேசுபொருளாக மாறியது, அமமுக டிடிவி தினகரனை திகார் சிறையில் வைத்தது மத்திய பிஜேபி அரசு,
தேர்தலில் இரட்டை இலை சின்னம் தராமல் இழுத்தடித்தது பிஜேபி அரசு,
சசிகலா நடராஜனை சிறைக்கு அனுப்பியது பிஜேபி அரசு,
அதிமுகவை எடப்பாடி கே.பழனிச்சாமி வசம் ஒப்படைத்தது பிஜேபி அரசு,
இதெல்லாம் பத்திரிகையாளர்களான நமக்கே தெரியும் போது சிறையிலிருந்த டிடிவி தினகரனுக்கு மறந்தா போகும் இருந்தும் பிஜேபி உடன் வெறும் இரண்டு தொகுதிகள் பெற்று கூட்டணிக்கு சரி சொல்கிறார் என்றால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் வியூகம் சாதாரணமானதாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை
எந்த சலசலப்புமில்லாமல் டிடிவி தினகரனை நம்பி அந்தத் தொண்டர்கள்
டிடிவி தினகரன் இருக்கும் கூட்டணியை ஆதரிக்கத் தயார்
ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்காக ஒரு தொகுதி காத்திருக்கும் நிலை போல.
1 தொகுதி கொடுத்தாலே அதிகம் என்கிற தமாகாவுக்கு மூன்று தொகுதிகள் என்பதும்
10 தொகுதிகள் கொடுத்தாலும் தகும் என்கிற அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் என்பதும் முரன்பாடு தான்
இதற்குப் பின் உள்ள அரசியல் பெரிது அதை பின்னர் அலசலாம்.
கருத்துகள்