முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிபிஐஐடி தொடக்க நிறுவனங்களுக்கு உதவ 'போட்' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டிபிஐஐடி தொடக்க நிறுவனங்களுக்கு உதவ தனியார் நிறுவனமான 'போட்' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) ஆடியோ மற்றும் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் இந்திய நிறுவனமான போட் உடன் ஒரு மூலோபாய கூட்டணியில் நுழைந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் D2C மற்றும் உற்பத்தி களங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் உட்பட DPIIT அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு தகுந்த ஆதரவை வழங்குகிறது. இந்த பரஸ்பர கூட்டாண்மையின் முக்கிய அம்சங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் அர்ப்பணிப்பு திட்டம்(கள்)/ முன்முயற்சி(கள்), முன்மாதிரி மேம்பாடு போன்ற பல்வேறு மைல்கற்களுக்கான ஆதாரங்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குதல் மற்றும் சர்வதேசத்திற்கான இணைப்புகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குதல். விரிவாக்கம், பொருந்தக்கூடிய மற்றும் சாத்தியமான இடங்களில். இந்த நிகழ்வில் பேசிய ஸ்டார்ட்அப் இந்தியாவின் இணைச் செயலர் ஸ்ரீ சஞ்சீவ், “இந்த முயற்சிய...

INS சர்வேக்ஷாக் போர்ட் லூயிஸ் வந்தடைகிறது

INS சர்வேக்ஷாக் போர்ட் லூயிஸ் வந்தடைகிறது ஐஎன்எஸ்  சர்வேக்ஷக்  , போர்ட் லூயிஸ், மொரிஷியஸ் நகருக்கு  26 டிசம்பர் 24 அன்று கூட்டு ஹைட்ரோகிராஃபிக் ஆய்வை  மேற்கொள்வதற்காக  வந்தடைந்தது . வந்தவுடன், கப்பல். மொரீஷியஸ் நாட்டுக்கான இந்திய உயர் ஆணையர் ஸ்ரீ அனுராக் ஸ்ரீவஸ்தவா, மொரிஷியஸ் தேசிய கடலோர காவல்படையின் தளபதி கேப்டன் சிஜி பினூப் மற்றும் பிற ராணுவ மற்றும் சிவில் உயரதிகாரிகள் வரவேற்றனர். மொரிஷியஸின் ஹைட்ரோகிராஃபிக் சர்வே யூனிட்டுடன் பூர்வாங்க கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஐஎன்எஸ்  சர்வேக்ஷக்  மொரிஷியஸ் அதிகாரிகளுடன் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், தொழில்முறை தொடர்புகள் மற்றும் ஹைட்ரோகிராஃபி பற்றிய பயிற்சி அமர்வுகள் மூலம் ஈடுபடும். கடல்சார் உள்கட்டமைப்பு, வள மேலாண்மை மற்றும் கடலோர மேம்பாட்டுத் திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்த இந்த முக்கியமான கணக்கெடுப்பு மொரீஷியஸுக்கு உதவும். தற்போதைய வருகையானது இந்தியாவிற்கும் மொரிஷியஸுக்கும் இடையிலான வலுவான கடல்சார் கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது, இது பிராந்திய வளர்ச்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபல...

உத்தரகாண்ட், இராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை

உத்தரகாண்ட், இராஜஸ்தான் மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நீதித்துறை அலுவலர்களை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் பரிந்துரைக்கிறது, உச்ச நீதிமன்ற கொலீஜியம், டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, 2024 அன்று நடந்த கூட்டத்தில், நீதித்துறை அலுவலர் ஆஷிஷ் நைதானியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. 11 நீதிபதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், தற்போது 6 நீதிபதிகளுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது, மேலும் 5 காலியிடங்களும் உள்ளன. டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, 2024 தேதியிட்ட அறிவிப்பில், “உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் 2024 டிசம்பர் மாதம் 22 ஆம்  தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில், நீதித்துறை அலுவலரான ஸ்ரீ ஆஷிஷ் நைதானியை உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.” கூடுதலாக, கொலீஜியம் மூன்று நீதித்துறை அலுவலர்களை இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக உயர்த்தப் பரிந்துரைத்தது: சந்திர சேகர் சர்மா,  பிரமில் குமார் மாத்தூர், மற்றும்.   சந்திர பிரகாஷ் ஸ்ரீமாலி. ஆகும்  அனுமதிக்கப்பட்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார். இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த, 1990 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியாவின் முக்கிய பட்ஜெட்களையும் தாக்கல் செய்த நிதியமைச்சர். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1954 -ஆம் ஆண்டில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் வணிகவியல் சார்ந்து படித்தார். பஞ்சாப் யூனிவர்சிட்டியிலும் டெல்லி ஸ்கூல் ஆப் காமர்ஸிலும் ஆசிரியராகப் பணியாற்றிய மன்மோகன் சிங், வணிகவியலில் கொண்டிருந்த ஆற்றல் காரணமாக அரசின் வணிகவியல் துறைக்கு ஆலோசகராக 1970 -ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினராகப் பணியாற்றி நிதியமைச்சராக இருந்தவர் 1998 - ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பிறகுதான், 2004 முதல் 2009 ஆம் ஆண்டுகள் வரை மற்றும் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை என இரண்டு முறை பிரதமராகவும் இருந்தார்.92 வயதாகும் மன்மோகன் ச...

தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் சபதம்

தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சபதம்.  கோயம்புத்தூரில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை தெரிவித்ததாவது: நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? அது மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதை எனக்கு நானே கேள்வியாகக் கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் என தொங்கிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டுள்ளோமா என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டுள்ளேன். இன்று காலையிலிருந்து எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி, நான் அரசியலில் தொடர வேண்டுமா என்ற கேள்வி தான். தமிழ்நாட்டில் பட்டப்பகலில் ஆளுநர் மாளிகையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டடத்திற்குப் பின்னால், கொடூரமாக சித்ரவதை செய்து, எதற்கு பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் சென்னையில் நடந்துள்ளது. அது வழக்கம் போல் அரசியலாகியுள்ளதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறோம். என்று சொல்வதை விட எங்கள் அரசியல் பாதையை தீர்மானிக்கும் தருணமாக இதனைப் பார்க்கிறேன் தமிழ்...

தனிநபருக்கு அரசு கட்டிக் கொடுத்த இலவசக் கழிப்பறைக்கு லஞ்சம் வாங்கிய இருவருக்கு தலா நான்காண்டுகள் தண்டனை

ஆண்டிமடம் அருகில் தனிநபருக்கு அரசு கட்டிக் கொடுத்த இலவசக் கழிப்பறைக்கு லஞ்சம் வாங்கிய நபர்கள் வழக்கில் பணி மேற்பாா்வையாளா் உள்ளிட்ட இருவருக்கு தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது, அரியலூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் . அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2017 ஆம் ஆண்டு ஒன்றியப் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்த சங்கர், நாகம்பந்தல் கிராமத்தில் முழு சுகாதார திட்டத்தின் கீழ் இராதா கிருஷ்ணன், திரிசங்கு ஆகியோர் கட்டிய கழிவறைக்கு அரசு வழங்கும் தொகைக்கு ரூபாய்.12,000 லஞ்சமாக  சங்கர், ரத்தினசிகாமணி ஆகியோர்  கேட்டுள்ளார். அதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் இருவரும் சேர்ந்து அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தனர். அதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் உதவியாளர் ரத்தினசிகாமணி ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இறு...

காவிரி ஆற்றில் நீச்சல் தெரியாத சிறுவர்கள் இருவர் பலி ஒருவர் மாயம்

திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் குளித்த10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மூவரில் ஒருவரின் நிலை என்ன?  இரண்டாம்  நாளாக தேடும் பணி தீவிரம். திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் அரசு உதவி பெறும் தனியார் கிருஸ்தவ (RC) மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்,     அரையாண்டு இறுதித் தேர்வு நேற்று முடிந்ததால், மதியம் ஒரு மணிக்கு  காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில், நேற்று மதியம் குளிக்கச் சென்றனர். அதில் ஜாகிர் உசேன், விக்னேஷ் மற்றும் சிம்பு என்ற 3 மாணவர்கள், தெர்மாகோல் அட்டைகளைப் தண்ணீரில் பரப்பி வைத்து அதைப் பிடித்தபடி நீச்சல் அடித்துள்ளனர் அவர்களது எடை தாங்காமல், தெர்மாகோல் அட்டை  உடைந்தது. பிடிமானத்தை இழந்த 3 மாணவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். மற்ற மாணவர்கள் அலறி கூச்சலிட்டதனால் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற நிலையில், மூவருமே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, மாவட்ட அலுவலர் ஜெகதீசன் உத்தரவில் அங்கு வந்த முப்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். ஆனால், தீயணை...