திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் குளித்த10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மூவரில் ஒருவரின் நிலை என்ன?
இரண்டாம் நாளாக தேடும் பணி தீவிரம். திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் அரசு உதவி பெறும் தனியார் கிருஸ்தவ (RC) மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அரையாண்டு இறுதித் தேர்வு நேற்று முடிந்ததால், மதியம் ஒரு மணிக்கு
காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில், நேற்று மதியம் குளிக்கச் சென்றனர். அதில் ஜாகிர் உசேன், விக்னேஷ் மற்றும் சிம்பு என்ற 3 மாணவர்கள், தெர்மாகோல் அட்டைகளைப் தண்ணீரில் பரப்பி வைத்து அதைப் பிடித்தபடி நீச்சல் அடித்துள்ளனர் அவர்களது எடை தாங்காமல், தெர்மாகோல் அட்டை உடைந்தது.
பிடிமானத்தை இழந்த 3 மாணவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். மற்ற மாணவர்கள் அலறி கூச்சலிட்டதனால் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற நிலையில், மூவருமே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, மாவட்ட அலுவலர் ஜெகதீசன் உத்தரவில் அங்கு வந்த முப்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
ஆனால், தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடியபோது, முதலைகள் ஆற்றுக்குள் தென்பட்டதனால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் இந்தப் பணியைத் தொடர முடியாமல், இன்று காலையில் மீண்டும் தேடுதல் தொடர்ந்தார்கள்.. அப்போது ஜாகிர் உசேன் என்ற மாணவனின் சடலம் மட்டும் கிடைத்தது. மற்ற இரண்டு மாணவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் தான் நீச்சல் அடிக்கலாம் என மாணவர்கள் அனைவருக்குமே ஆசைப்பட்டதனால் ஆற்றின் மையப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், ஆற்றின் மையப் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததனால், எதிர்நீச்சல் போடத் தெரியாமல் தவித்தனர். நீச்சல் தெரிந்த ஏழு மாணவர்களும் தத்தளித்துக் கொண்டே கரைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் நீச்சல் முழுமையாகத் தெரியாத 3 மாணவர்கள் மட்டும் வெள்ள நீரில் சிக்கி கொண்டதால். மீட்புப் படையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வருவதற்குள், பிடிமானம் இல்லாமல் நீரில் மூழ்கத் துவங்கினர்.மாணவர்களை மீட்பதற்காக முதலில், ரப்பர் டியூப் உதவியுடன் காவிரியின் மையப்பகுதிக்கு சென்று கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் தேடிப் பார்த்திருக்கிறார்கள். அப்போது தான் ஒரு பெரிய முதலை ஆற்றில் நீந்திச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த முதலை புதருக்குள் செல்லும் வரை காத்திருந்து மறுபடியும் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், முதலைகள் நடமாட்டம், மற்றும் இரவு வெகு நேரமாகிவிட்டதால் தான், தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பிறகே தேடும் பணி மறுபடியும் தொடங்கப்பட்டது. இன்று மொத்தம் 50 பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகு, பரிசல், ஸ்கூபா போன்ற உபகரணங்களுடன் இறங்கினர். அந்த 2 மாணவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை.. அதனால் காவிரி ஆற்றுப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கருத்துகள்