கோயமுத்தூர் இந்து முன்னணி காரர்களுக்கு அரிவாள் வெட்டு... கவுண்டம்பாளையத்தில் நேற்று மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணியை சேர்ந்த இருவர் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க வைச் சேர்ந்த அசோக் உட்பட 6 பேரை துடியலூர் காவல் துறையினர் தேடிவருகின்றனர். கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட் மற்றும் அவர்களது நண்பர் ஹரீஷ் ஆகியோர் கார் டிரைவருக்கு ஆதரவாக பேசியதாகவும்
அந்தப் பெண் சகோதரர் செல்வா என்பவரிடம் தெரிவிக்கவே, அவர் பா.ஜ.கவில் உள்ள தனது நண்பர் அசோக் மற்றும் அவரது நண்பர்களிடம் தெரிவித்தார்.
இதனை அடுத்து, வாகனம் ஓட்டிவந்த இரு தரப்பினரும் சென்று விட்ட நிலையில், விபத்து நடத்த இடத்தின் அருகே கார்த்திக் மற்றும் அசோக் ஆகிய இரு தரப்பினரும் சந்தித்து பேசிக்கொண்டனர். இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதிக்கொண்டனர்.
இதில் பா.ஜ.க வை சேர்ந்த அசோக் தரப்பினர் அரிவாளால் தாக்கியதில் இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட் அவர்களின் நண்பர் ஹரீஷ் ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி அசோக் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஒடிவிட படுகாயமான.
3 பேரையும் காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகளை அரிவாளால் தாக்கியதாக
பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி அசோக் அவரது கூட்டாளிகள் ராசு, சண்முக சுந்தரம் , சச்சு உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு தரப்பிற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது இருதரப்பு சொந்தப்பகை இதில் இந்து முன்னணியும் பி ஜே பி யும் தேவையானதா இதுவே நம் வினா இந்தச்சம்பவத்தில் கட்சிக்குச் சம்பந்தம் உண்டா
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்