முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும் *ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..   


பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  '
மையல்' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார்.


"எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். 'மையல்' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.





நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி, மிஸ் க்ரிஹலக்ஷ்மி, ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்டார் மிஸ் ஃபேஸ் ஆஃப் இந்தியா-2021 ஆகிய பட்டங்களை வென்றவர். பிரதி பூவன்கோழி-2019, சுமேஷ் மற்றும் ரமேஷ் -2021, கைபோல 2023 மற்றும் அவரது வரவிருக்கும் வெளியீடான பரன்னு பரன்னு பரன்னு செல்லன்  இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். 

இத் திரைப்படம் ரொமாண்டிக் திரில்லர் படமாக பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டதிந்தப் படம் என்கிறார் திரைத் துறையில் நல்ல பல அனுபவங்கள் பெற்ற இயக்குநர் ஏபிஜி ஏழுமலை. இவர் கண்ணும் கண்ணும், லாடம், மைனா, கும்கி.திரைப்படங்களில் இயக்குனர் பிரபுசாலமனின் இணை இயக்குநராகவும், இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகவும் இருந்து பணி செய்த அனுபவம் உள்ளவர் 

ஆர். வேணுகோபால்-அனுபமா விக்ரம் சிங், தயாரிக்க ஜெய மோகன் கதை,திரைக்கதை,உரையாடல் எழுதிய நிலையில் சிறப்பாக இயக்கிய இயக்குனர் ஏபிஜி ஏழுமலை,  நமது நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்பிலுள்ள குறைபாடுகள் குறித்து மையல் கதை மூலம் எழுத்தாளர் விவரிக்கும் நிலையில் இயல்பான முறையில் படமாக்கிய இயக்குனர் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில்,"மைனா படத்தில் நடித்த சேது. மையலில்  ஒரு சிறிய திருடனாக நடிக்கிறார்," என இயக்குனர் ஏபிஜி ஏழுமலை  பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.



சம்ரிதி தாராவின் கதாபாத்திரத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் சம்ரிதி தாரா ஒரு சிறிய நகரத்துப் பெண்ணாக ஒரு தனிமையான வாழ்க்கை வாழ்கிறார். அவரது வாழ்நாள் முழுவதும், அவரது பாட்டி மற்றும் அவரது வளர்ப்பு எருமைகளுடன் மட்டுமே அவர் தொடர்புள்ள ஒரு கதாபாத்திரம் கொண்டார். அவர் ஒரு சமூகத்தில் வாழ்வியல் படி வாழவில்லை, பிறரால் நேசிக்கப்படுவது எப்படி என அவருக்குத் தெரியாது. அவரது பாட்டியின் கதாபாத்திரம் மூலம் பில்லி சூனியம் பற்றிய நுண்ணறிவையும் படம் விவரிக்கும் . இருப்பினும், சேதுவின் கதாபாத்திரம் மூலம் அவரது காதல் நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் நீதித்துறை அவர்களின் காதலில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துவதால் கதையில் ஒரு திருப்பமுள்ளது. அது நன்மைக்காகவா அல்லது தீமைக்காகவா என்பது தான் மையல் திரைப் படத்தின்  மையக்கரு."



இத் திரைப்படம்  37 நாட்களில் மட்டுமே வீன் செலவுகளின்றி தேவையான காட்சிகள் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஏபிஜி.ஏழுமலை குறிப்பிட்டார். "கதைக்களம் திருவண்ணாமலையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கிறது, மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் படமாக்கியுள்ளனர். சில ஆண்டு காலமாக தமிழ் திரைப்படங்கள் இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் இயக்குனர் போல திறமைசாலிகளையும் ஆதரித்து வரவேற்கிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவரை இயக்குனர் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார்.



மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழில் ‘மையல்’ படத்தில் மாற்று மொழியில் அற்புதமாக அறிமுகமாகிறார். ‘மையல்’ படததின் .  நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் ,நடிகர்கள் வெங்கையா பாலன்,சி. எம். பாலா, இரத்தின கலா,காரைக்குடி ரெங்கநாதன் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதை விட இயக்குனர் கதாபாத்திரமாக வாழ வைத்துள்ளார்  எனலாம். 

திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சங்கராபுரம் கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுத் திரைப்படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.  

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, சார்பில் ஆர் வேணுகோபால்-அனுபமா விக்ரம் சிங், தயாரிக்க, ஜெய மோகன் கதை உரையாடல் எழுத இயக்கியுள்ளார் ஏபிஜி ஏழுமலை,    அமர்கீத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.


பாலா பழனியப்பன் ஒளிப்பதிவில் மலை வாழிடம் நேரில் பார்ப்பது போல காட்சிப்படுத்தியுள்ளார் : இக் கதை களத்தில் பாலா எடிட்டர் காட்சிகள் சலிப்பு இல்லா நிலையில் படம் வெற்றிக்களமாக இயக்குனர் முயற்சியில் அமைந்துள்ளது. விரைவில் வெனித்திரையில் இயக்குனருக்கு ஒரு வெற்றிப்படமாக வண்ணக் காவியமாக '
மையல்'  மையம் கொள்ளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...