மதுரையைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த 38 வயதுள்ள நபரும், செல்லூர் பகுதியை சேர்ந்த 21 வயது நபருமாவர். இருவருக்கும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நோய்த் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.மற்ற இருவர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தெற்குவாசல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர். வயது 51. மற்றொருவர் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இரண்டு பேரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்ட போது கொரானா பரவி இருக்கலாம் என தெரிகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்கள் வசித்த செல்லூர், மேலமாசி வீதி, பழங்காநத்தம், பெருங்குடி பகுதிகளில் உள்ள தெருக்களுக்குச் சீல் வைக்கப்பட்டன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பைச் சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. காவல் நிலையத்தில் அவர்களுடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மேலவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் நிலையத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மதுரையில் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 வரை உயர்ந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்