ஊரடங்கால் உருவாகிப் பெருகியது கள்ளச்சாராயம் ஊரல் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில், கள்ளத்தனமாகச் சாராய ஊரல் போட்டும், மதுபாட்டில்களையும் பல மடங்கு விலை ஏற்றி விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் சூழல் உருவாகியிருப்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகளி லிருந்த சரக்கு மொத்தம் பாதுகாப்புக் கருதி குடோனுக்கு மாற்றப்படுகிறது.
இதுபோன்று டாஸ்மாக் சரக்குகளை ஏற்றி இறக்கும் ஒப்பந்தத்தை ஆளும்கட்சியினர் எடுத்துள்ளதால், கடைகளிலிருந்து குடோனுக்கு மாற்றும் போது பாதி மதுவைக் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடலூர் முதுநகரில் உள்ள ஒரு கடையில் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கும்போது, அங்குக் குடிகாரர்கள் கூட்டம் கூடியுள்ளது. அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் விசாரித்துள் ளார். உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் 36 ஆயிரம் மதிப்புள்ள மூன்று பெட்டிகளை எடுத்துக்கொண்டு, கடை ஊழியர்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.மூவரிடமும் உங்கள் மீது வழக்குப்பதியாமல், சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ஸ்டேஷன் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் ஆய்வாளர். இதற்கு ஊழியர்களோ, “நாங்கள் போலீஸ் உதவியுடன் தான் சரக்குகளை ஏற்றினோம், மக்கள் கூடியதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்” என்று கேட்டுள்ளனர். இதற்கு ஆய்வாளர், “நீங்கள் சட்டம் பேசுறீங்க ஜெயிலுக்கு போங்க” என்று மிரட்டியிருக்கிறார். பின்னர் ரூ.50,000 பணத்தைக் கடன் வாங்கி லஞ்சமாக கொடுத்துட்டு ஊழியர்கள் வந்துள்ளனர்.
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பிரபலமான சக்கரை ஆலையிலிருந்து ஸ்பிரிட் எடுத்து வந்து லிட்டர் சாராயம் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு லிட்டருக்கு 6 லிட்டர் தண்ணீர் கலந்த சாராயம், 100 மில்லி 150 ரூபாய்க்கு குறிப்பிட்ட பகுதியில் விற்பனை செய்யப்படுகிறதாம்.ஓசூர் அடுத்த பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய குத்தி என்னும் கிராமத்தில் இரண்டு பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதாகத் தகவல் அறிந்த போலீசார் இரண்டு பகுதிகளிலும் சாராயம் காய்ச்சுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 610 லிட்டர் ஊரல்களைல் கொட்டி அழித்தனர்.ஏப்ரல்12 ஆம் தேதி ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே சாராயம் காய்ச்ச ஊரல் போட்டு வைத்திருந்த சிவலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதாவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, ராயக்கோட்டை காவல் நிலைய அதிகாரிகளிடம் இடத்தை குறிப்பிட்டு ரெய்டு நடத்த உத்தரவிட்டுள்ளார். உடனடியாக உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், மஞ்சுநாதன் மற்றும் காவலர் களுடன் ஏப்ரல் 11 ராயக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திம்ஜேப்பள்ளி கிராமத்தில், சாராய ஊரல் போட்டுக் காய்ச்சிய திம்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நடேசன், எல்லேசன், இருவரையும் கைது செய்தனர். ஊரலைக் கைப்பற்றிய போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தடையை மீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 1440 மது பாட்டில்களைக் காவல் நிலைய வளாகத்தில் குழிதோண்டி பள்ளத்தில் ஊற்றி போலீசார் அழித்தனர். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலும் விஏஓ ரமேஷ் முன்னிலையிலும் அனைத்து மது பாட்டில்களும் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது இதுபோன்று நாளுக்கு நாள் கள்ளச்சாராயமும், கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுடன் போராடி வரும் காவல்துறையினருக்கு இது ஒரு சவாலாகவே இருக்கும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்