அனைவரும் முகக்கவசம் பயன்படுத்தினால் கொரானா வைரஸ் உள்ளிட்ட எந்தக் கிருமியும் நம்மை தாக்காது எனக் கருத்து உண்டு. அதனால் உலகமெங்கும் வழக்கத்தை விட முகக்கவசம் விற்பனை அதிகமானது. தேவையை உத்தேசித்துப் பணம் சம்பாதிக்க சில கும்பல் ஏற்கனவே மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தி வீசிய முகக்கவசம் சேகரித்து அதனை குடோன்களில் வைத்து துடைத்துச் சுத்தம் செய்து மறுபடியும் விற்பனைக்கு அனுப்பும் நிலை கவலை தருகிறது. வடமாநிலத்தில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பதிவு இந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. குப்பை மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ள பயன்படுத்திய பழைய அணிந்த முகக்கவசங்க ளைச் சிலர் பிரித்துச் சுத்தம் செய்து அடுக்குகிறார்கள். அதைப் புதிய பாக்கெட்களில் வைத்து விற்பனைக்கு மீண்டும் அனுப்ப உள்ளதாக இந்த வீடியோ காட்டுகிறது. பழைய பயன்படுத்தி ய முகக்கவசங்களில் உள்ள கிருமிகளே புதிதாக பயன்படுத்து வோருக்கும் பரவி வேறு நோய்களையும் பரப்ப வாய்ப்புகள் உள்ளது. இதை மத்திய அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம், மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் நிலை.
இவை அல்லாது இப்போது கட்சி அரசியல் சார்ந்த முகக்கவசங்கள் அணிவதும் பல இடங்களில் காணமுடிகிறது அதிலும் அரசியல் புகுந்து விட்டது நேற்று திமுக கூட்டுக் கட்சிகள் நடத்திய. அவர்கள் இணைப்பு அனைத்துக் கட்சிகளைக் கலந்து பேச காணொளி ஒலி காட்சிக்கு முகக்கவசம் அணிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் பலரால் பேசப்படும் நிலை. வீட்டில் முகக்கவசம் அணியாதவர் கணிப்பொறி முன் அணிந்து பேசுவது ஆச்சரியம் தானே.N95 முகக் கவசம் மாத்திரம் தான் வைரஸ் கட்டுப்படுத்தும் மற்றவை தூசியும் பாக்டிரியங்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்ற உண்மை மருத்துவர்கள் அறிவார்கள் ஆனால் மக்கள் அறிந்தால் பலரது அரசியல் வியாபாரம் படுத்து விடுமே.அந்தக் கவலை அவர்களுக்கு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்