சென்னையில் நிலைமை மிக மோசம் எச்சரிக்கும் மத்திய அரசு
கூடுதல் பொறுப்புணர்வு தேவை,
விழித்திருந்து பயனில்லை விழிப்போடு இருக்க வேண்டும், இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னை மாநகரத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் சுகாதாரத் தலை நகராகவும், மருத்துவச் சுற்றுலா மையமாகவும் அறியப்பட்ட சென்னை நகரம் இப்போது கொரானா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருப்பதே உண்மை.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் நான்கில் ஒரு பங்கு சென்னையில் தான் நிகழ்ந்திருக் கின்றன.சென்னையில் கடந்த 10 நாட்களில் கொரானா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் கூடுத லாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிதாக ஏற்படும் தொற்றுகளில் பெரும்பாலானவை சென்னையில் தான் ஏற்படுகின்றன.இதை யடுத்து சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காகவும், நிலைமையை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசுக்கு ஆலோசனை களை வழங்குவதற்காகவும் பல்வேறு மத்திய அமைச்சகங்க ளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்திருக்கிறது.கொரானாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை, புனே, தானே,அகமதாபாத், சூரத், ஐதராபாத் ஆகிய நகரங்களு டன் சென்னையையும் சேர்த்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம்
ஊரடங்கு விதிகளை மதிக்காமல் மக்கள் வெளியில் சுற்றியது தான் இத்தகைய மோசமான நிலைக்கு காரணம் என்றும் கூறியுள்ளது.
ஊரடங்கு மீறல்கள் கட்டுப்படுத்தப் படாமல், தொடர அனுமதிக்கப் பட்டால் நோய்ப்பரவல் மேலும் அதிகரித்து நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் ஊரடங்கு ஆணையை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. வெளியில் செல்லும் போதும் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் முகக்கவசங் களை கண்டிப்பாக அணிந்து செல்லுங்கள், என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பெரும்பாலோனோர் அதைக் கடைப்பிடிக்கவில்லை,
விளம்பரத்திற்காக காட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், தனி நபர்கள் வழங்கும் நலத்திட்டங்கள் வழங்குமிடங்களில் கூட்டம்.
இத்தகைய இடங்களில் கொடுப்பவர்க்கு கொரானாவா. வாங்குவோர்க்கு கொரானாவா அது தெரியாது விழித்திரு,. விலகியிரு. வீட்டிலிரு என்ற கோஷம் இனி எடுபடாது
இல்லத்திலேயே எல்லோரும் இருங்கள்.இல்லத்திலேயே எல்லாமும் பெறுங்கள்.
என கோஷத்தை மாற்றுங்கள்
1)டோர் டெலிவரி.
2)ஆன்லைன் சர்வீஸ்
இவ்விரண்டையும் மக்களும், அரசும் கடைபிடித்தால் தான், முழுமையாக ஊரடங்கு வெற்றி பெறும், நோய் தொற்று ஏற்படாது
புகைப்படம் இன்று காலை 9 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட் டில் எடுத்தது.கவலை தருவதாக உள்ள நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்