தமிழகத்தில் 34 வகையான கடைகள் மற்றும் நிறுவனங்கள் நாளை முதல் செயல்படும் சலூன் கடைகள் நீங்கலாக. தமிழக அரசு உத்தரவு. மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதில் சில கடைகளுக்கு அனுமதியில்லை.
தமிழகத்தில் கொரானோ நோய் தொற்று தடுக்க மார்ச் 24 ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக ஊரடங்கு அமலிலிருக்கும்சூழலில் கடந்த மே 2 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூடி எடுத்த முடிவானது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும் தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக நாளை முதல் குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது பணிகளுக்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியானதில் பிற தனிக்கடைகள் பிரிவில் புதிதாக 34 வகைக் கடைகள் சேர்க்கப்பட்டு நாளை முதல் இயங்கலாமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில் டீக்கடைகள்(பார்சல் மட்டும்), பேக்கரிகள்(பார்சல் மட்டும்), உணவகங்கள்(பார்சல் மட்டும்), பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்,
சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரி வேர் விற்கும் கடைகள்,மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்,கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்,
மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை),
சிறிய ஜவுளிக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) ஊரகப் பகுதிகளில் மட்டும், மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்,
டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள், பெட்டி கடைகள்,
பர்னிச்சர் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகங்கள்கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள்,
இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள்,
விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்,
டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிகல் கடைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்,
நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் மற்றும் பிளைவுட், மரம் அறுக்கும் கடைகள், ஆகியவை திறக்கலாம். முடி திருத்தும் நிலையங்கள், ஸ்பா, பியூட்டி பார்லர்கள் இயங்கக் கூடாது. ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக் கப்பட்ட பணிகள் அல்லது கடைகள் தொடர்ந்து இயங்கும். கொரானோ பாதிப்பைக் கணக்கில் கொண்டு வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு அல்லது கடைகளுக் கு தளர்வுகள் அறிவிக்கப்படும் நிலை வரும்.மேற்கண்ட கடை உரிமையாளர்கள் குளிர்சாதனம் பயன்படுத்தாமல் கடை நடத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல் துறை யினர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட் டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்