பொள்ளாச்சி பாலியல் கொடூரங்க ளுக்கு இணையாக கன்னியா குமரியில் நடந்த குற்றம் கொடூரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியா குமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் தங்கபாண்டியனின் மகன் காசி என்ற சுஜிதரன் வயது 26.இவர் கடந்த சில வருடங்களா கப் பல பெண்களைக் காதலித்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவரை இவர் ஏமாற்றி இருக்கிறார். முகநூல் மூலமாக அவருடன் நட்பாகிக் காதலித்து, அவரிடம் பல லட்சங்கள் பணம் பறித்து ஏமாற்றியுள்ளார். நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை இணையத்தில் பதிவிட போவதாக தொடர்ந்து மிரட்டி ஏமாற்றி வரவே அந்தப் பெண் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காசிக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். அதேபோல் நாகர்கோவிலில் இன்னொரு பெண்ணும் காசிக்கு எதிராக புகார் அளித்தார்.காசி மீது நாகர்கோவில் காவல்துறையினர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட காசியை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் காசியின் தந்தை தனது மகன் மீது வேண்டுமென்றே பொய்ப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். காசியின் இந்த செயலுக்குப் பின் நிச்சயம் பலருக்கும் தொடர்ப்பு இருக்கலாம் என்றும், இது ஒரு நெட்வொர்க் போல உள்ளதாக சந்தேகிப் பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மூன்று நாள் விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்