தொழில் அதிபர்களைப் போல் நடித்து ரூ.3.86 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தோமெனக் கைதாகிய கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் மேலாளர் தில்லை கோவிந்தன். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் நீலாங்கரையைச் சேர்ந்த, முகமது முசாமில், அய்யாதுரை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பாலவிஜய், ஆகியோர், எங்கள் வங்கிக் கிளையில், வருமான வரித்துறையின் ஆவணங்களைப் போலியாகத் தாக்கல் செய்து, கார் கடன் வாங்கி மோசடி செய்ததாகவும்இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து, வெள்ளிக்கிழமை முகமது முசாமில் (வயது 34) பாலவிஜய் (வயது 35) அய்யாதுரை, (வயது32) ஆகியோரை விசாரித்ததில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.


கருத்துகள்