குஜராத்தி கவிஞர் தாதுதன் கத்வி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரபல குஜராத்தி கவிஞர் பத்ம ஸ்ரீ தாதுதன் கத்வி மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘நாட்டுப்புற இலக்கியத்துறையில் கவிஞர் தத் பாபுவின் பங்களிப்பு எப்போதும் நினைவுக் கூறப்படும். மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல் திரு.மனோஜ் தாஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி, சிறந்த கல்வியாளரும். பிரபலமான எழுத்தாளருமான திரு.மனோஜ் தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “திரு.மனோஜ் தாஸ் சிறந்த கல்வியாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆவார். அவர் ஆங்கில மற்றும் ஒடியா இலக்கியத்திற்கு அரும்பங்காற்றியுள்ளார். திரு.அரவிந்தரின் தத்துவத்தை கடைபிடித்து முன்னிலைப்படுத்தினார். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”.
கருத்துகள்