முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யாக Dr.C.சைலேந்திரபாபு,M.Sc(Agri),BGL,MA,MBA,Ph.D,59(5/6/1962) நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யாக  Dr.C.சைலேந்திரபாபு,M.Sc(Agri),BGL,MA,MBA,Ph.D,59(5/6/1962) நியமனம்.   


      அரசு அனுப்பி இருந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த அதிகாரிகள் பலர் மிகவும் நேர்மையான அதிகாரிகளெனப் பெயரெடுத்தவர்கள். முக்கியமாக சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, ஏகே விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், ஆகியோர் இந்த டிஜிபி போட்டியில் முன்னிலையில் இருந்தார்கள்.

11 பேரின் பட்டியல் அனுப்பப்பட்டிருந்தாலும், இதில் குற்ற வழக்கு இல்லாத பணி அனுபவ மூப்புக் கொண்ட 5 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டு, அதன்பின் புதிய பட்டியல் தயார் செய்யப்படும்.  இதில் ஒவ்வொரு அதிகாரியின் பின்புலம், அனுபவம் ஆராயப்பட்டு 4 அதிகாரிகளின் பெயர்கள் தலைமைச் செயலாளரிடம் தரப்படும்.

இந்த பட்டியலை தமிழ்நாடு அரசு மீண்டும் சோதனை செய்யும். 4 பேரில் தகுதியான நபர்கள் யார் என்று சோதனை செய்து அதிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதில் சைலேந்திர பாபுவிற்கு டிஜிபி ஆகும் வாய்ப்பு முன்பே அதிகம் இருப்பதாக வந்த தகவல்கள் படி இன்று மாலை டிஜிபி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது                                  தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருந்தது உறுதியாக அவர் தற்போது நியமனம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைப் பூர்விகமாகக் கொண்டவர், ரயில்வே டி.ஜி.பி.யாக தற்போது பொறுப்பிலிருக்கிறார்.

இதே டிஜிபி பொறுப்புக்கு தகுதிசால் ஐபிஎஸ் அதிகாரிகளாக சிலரும் பட்டியலில் இருந்தனர். தீ அவிப்பு மற்றும் மீட்புப் படை டிஜிபியாக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரன்சின்ஹா, எல்லைப் பாதுகாப்புப் படை (மத்திய அரசுப்பணி) டிஜிபியாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, சிறைத்துறை டிஜிபியாக உள்ள பீஹாரைச் சேர்ந்த சுனில்குமார் சிங், அதே பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரும் சிபிசிஐடி டிஜிபியுமான முஹம்மது ஷஹில் அக்தர் மற்றும் லஞ்ச ஒழிப்பு (ம) ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியுமான கந்தசாமி ஆகியோர் காவல் தலைமை இயக்குநர், தமிழ்நாடு பொறுப்பிற்கு தகுதிசால் ஐபிஎஸ்களாக வரிசையில் உள்ளனர். மேற் குறிப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் வயதில் இளையவர் சஞ்சய் அரோரா மட்டுமே. 2025 ஆம் ஆண்டு வரை அவர் காவல்துறை பணியிலிருப்பார்.  லஞ்ச ஒழிப்புக்கும் சிறைத்துறைக்கும் டிஜிபிகளாக இருக்கும் (முறையே) கந்தசாமி, முஹம்மது ஷஹில் அக்தர் ஆகியோரின் பணியிடமும் அந்த பணிக்கான அவர்களின் தேவையும் சிறப்பான செயல்பாடும் அவர்களின் பதவியை அதே இடத்தில்  தக்க வைத்துள்ளதாகச் சொல்லப் படுகிறது. அதேபோல் தனித்தனி டிஜிபி தகுதி பதவிகளான ரயில்வே மற்றும் தீ அவிப்புத் துறை ஆகிய இரண்டுக்கும் ஒரே டிஜிபியாக சைலேந்தர்பாபு இருந்த போதுதான் டிஜிபி தகுதி பதவிகளுக்கான இடமாற்றம் வந்தது;  அதிலிருந்துதான் கரன்சின்ஹாவுக்கு தீ அவிப்பு (ம) மீட்புப்பிரிவு பிரித்துக் கொடுத்து விட்டு சைலேந்தர்பாபுவை ரயில்வே டிஜிபியாகவே பதவியில் தொடர வைத்தனர்... அதை 'காரண' த்தோடு சுட்டிக் காட்டுகிறது காவல்துறை வட்டாரம். யுபிஎஸ்ஸி பரிந்துரை செய்யும் சிலரில் ஒருவரை மாநில அரசுதான் கொள்கை முடிவு - பணித் தேவை அடிப்படை என்ற ரீதியில் தேர்வு செய்வது வழக்கம். இது நமது சொந்தக் கருத்தாகும் பணித் தேர்வு தேவையில் நேர்மை எனும் தராசில் வைத்துப் பார்த்தால் இம்மியளவுக்குக் கூட தராசு முள் நேர்கோட்டில் இருந்து சாயாது. மெச்சத்தகுந்த திறமையாளர். சட்டத்தின் வழிநின்று காவல்துறை பணியாற்றுபவர். தமிழ்நாடு காவல்துறையின தலைமை இயக்குனர் பதவிக்கு தகுதியானவர், பணி மூப்பு அடிப்படையிலும், திறமையிலும், தகுதியிலும் இருப்பவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கூடுதல் சிறப்புகள், நிறைய இருக்கிறது 

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் பதவியில் அவரை அமர்த்தி அழகுப்பார்க்கிற பெருந்தன்மையும், ஆட்சிப்பீடத்திற்கு தலைமையேற்று இருக்கும் ஆட்சியாளருக்கும் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக, மிதிவண்டி மூலமே அளந்து பார்த்துள்ள ஒரே ஐபிஎஸ் உயரதிகாரி என்றால், அது நிச்சயம் சைலேந்திரபாபு ஐபிஎஸ்., ஆகத்தான் இருக்கும்.

58 வயதில் காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) என்ற உயர்ந்த அந்தஸ்துக்கு வந்து விட்ட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், உச்சப்பட்ச அதிகாரத்தை சுவைத்துக் கொண்டு, நான்கு சுவருக்குள் ஏஸி அறைக்குள் அமர்ந்து கொண்டு கோப்புகளோடு விளையாடி தங்கள் கடமையை முடித்துக் கொள்ளலாம். இதுவரை இப்படிபட்ட மனப்பான்மையுள்ள ஐபிஎஸ் உயரதிகாரிகளைத்தான் தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால, அவர்களில் இருந்து விதிவிலக்காக, வித்தியாசமாக கொய்யாப்பழம் விற்பனை செய்கிற சாலையோர மூதாட்டியிடம் கூட அவரது மகனைப் போல, பேரனைப் போல பாசத்தோடும், பரிவோடும் பேசுகிற ஒரு காவல்துறை உயரதிகாரியை, சைலேந்திரபாபு ஐபிஎஸ் மூலமாகதான் தமிழகம் அடையாளம் கண்டிருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் தான் மட்டுமே தனித்த அக்கறை கொள்ளாமல், இளம் சமுதாயமும், தமிழர்களும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும் என்ற பாடத்தை, பல நூறு வீடியோக்கள் மூலம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பயிற்றுவிக்கும் மனப்பாங்கும் படைத்தவராக இருக்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் தமிழ் தேசியவாதிகள், இன்றைக்கும் ஆலயத்தில் உள்ள கடவுளுக்கே புரியும் மொழியான தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற வாதம் அழுத்தமாக வைக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், சாதாரண காவலர்கள் முதல் ஐபிஎஸ் அந்தஸ்து உடைய அதிகாரிகள் வரை அவர்கள் மொழியில் பேசுகிற இயல்பாகவே மொழி ஆளுமையாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ்.ஸை விட பொருத்தமானவர் வேறு உயரதிகாரிகள் இல்லை என்றே கூறலாம்.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஒரே குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆளப் போறான் தமிழன் உலகமெல்லாமே. இந்த வைர வரிகள், இளம் சிறார்கள் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கிறது. தெருவுக்கு தெரு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலளார் வெ.இறையன்பு ஐஏஎஸ்..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ்




இன்றைய நிலையில், இந்தக் கூட்டணி  தமிழ்நாடு காவல்துறைக்கு புதுவாழ்வு கிடைத்த மாதிரி அமையும் என்பதே, தமிழ்நாடு காவல்துறையில், தலைமைப் பீடத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளைத் தவிர மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் பெரும்பான்மையான காவல்துறை அலுவலர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. DGP Dr.C.Sylendra Babu is tipped to become the new Head of the Police Force,Tamil Nadu DGP            மக்கள் திலகம் புரட்சித்தலைவர்  எம்ஜிஆர் அவர்கள், முதன்முறையாக தமிழக முதலமைச்சராகப் ஆட்சிபொறுப்பேற்ற  நாள் இன்று.(1977 ஜூன் 30) 

இதே நாளில் இன்று தமிழக காவல்துறை அதிகாரியாக  பதவியேற்கும் திரு. சைலேந்தர்பாபு அவர்களை வாழ்த்துவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.