இன்றைய கழிவு - நாளைய எரிசக்தி"

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கழிவிலிருந்து வளம்: பேட்டரிகளுக்கான திறன்மிகு ஊக்கிகளாக தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விளங்கும்


மின்கலன்களில் (பேட்டரி) எரிசக்தியை சேமித்து வைப்பதற்கான அடிப்படையாக தொழிற்சாலைக் கழிவுகள் எதிர்காலத்தில் திகழலாம். எரிசக்தித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பேட்டரிகளுக்கான திறன்மிகு ஊக்கிகளாக விளங்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

"'இன்றைய கழிவு - நாளைய எரிசக்தி" என்னும் கனவை நனவாக்கும் விதமாக பேட்டரிகளில் எரிசக்தியை சேமித்து வைக்க தொழிற்சாலைக் கழிவுகளை  திறம்பட பயன்படுத்துவதற்கான புதிய உத்திகளை இதன் மூலம் உருவாக்கலாம்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சிப் பெற்ற நிறுவனமான சென்டர் ஃபார் நேனோ அண்டு சாஃப்ட் மேட்டர் சயின்சஸை சேர்ந்த டாக்டர் சி சதிஷ் குமார், டாக்டர் நீனா எஸ் ஜான் மற்றும் டாக்டர் எச் எஸ் எஸ் ராமகிருஷ்ண மட்டே ஆகியோர், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பசுமை மையத்துடன் இணைந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் திறன் வாய்ந்த ஆக்சிஜன் ஊக்கியாக பயன்படும் என்பதைச் செயல்படுத்திக் காட்டி உள்ளனர்.

சஸ்டைனபிள் எனர்ஜி ஃபியூயல்ஸ் எனும் சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத்திற்கான மையம்- எண்ணெய் மற்றும் தொழில் மேம்பாட்டு வாரியம், ஹைட்ரஜன் கார்பஸ் நிதியால் ஆதரவளிக்கப்பட இந்த ஆராய்ச்சி, தொழிற்சாலைக் கழிவை எரிசக்தி சேமிப்பில் பயன்படுத்த உதவி, தனித்தன்மை மிக்க வகையில் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்ய வழிவகுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா