அனைத்திந்திய மரம் நடும் பிரச்சாரம்-2021’-ன் கீழ் 1 கோடியாவது மரத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் நட்டார்

உள்துறை அமைச்சகம்  மத்திய ஆயுத காவல் படையினரால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைத்திந்திய மரம் நடும் பிரச்சாரம்-2021’-ன் கீழ் 1 கோடியாவது மரத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நட்டார்மத்திய ஆயுத காவல் படையினரால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைத்திந்திய மரம் நடும் பிரச்சாரம்-2021’-ன் கீழ் 1 கோடியாவது மரத்தை மகாராஷ்டிராவின் நாண்டெடில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று நட்டார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, அனைத்து படையினரும் இணைந்து 10 மில்லியன் மரங்களை நட வேண்டும் மற்றும் அவற்றை வளர்ப்பதற்கான அறிவியல்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள் வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மத்திய ரிசர்வ் காவல் படை இல்லாமல் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு என்பது கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும், சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நாடு பெருமை கொள்வதாகவும், உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது என்றும் அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதுமுள்ள 170--க்கும் அதிகமான மாவட்டங்களில் 10 மில்லியன் மரங்களை நடும் பணியை மத்திய ஆயுத காவல் படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் குறித்த அரசு நிறுவன செயல்முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கியுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா