முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவு வைரலாகியது

டெல்லியில் 


நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில்

உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றிய போது  ஹிந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்தி தான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என்ற அவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,         
  கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பக்கத்தில், 'வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா?' என பதிவிட்டுள்ளார். அதேபோல ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு இசையமைப்பாளர் ஏ. .ஆர் ரஹ்மான்  பதிவு வைரலாகிகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலா படங்களுக்கு இசையமைத்து, இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர். உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் தன்னிடம் வேண்டுமென்று ஹிந்தியில்  பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுக்கிறார். அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக அவ்வப்போது சமூக வலைதளத்தில் தன் ஆதரவைதா தெரிவித்து வந்திருக்கிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சி திராவிடப் பெண்ணின் புதிய புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.இது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியைபா பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 சதவீதம் அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது முன்பே ஏ ஆர் ரஹ்மான், கதை எழுதித் தயாரித்த 99 சாங்ஸ் என்ற  படத்தின் ட்ரைலர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானதில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் நடித்திருந்தனர். இப் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றதில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். அதில் ஏ ஆர் ரஹ்மானிடம் தமிழில் பேசிவிட்டு ஹீரோவிடம் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசி வரவேற்றார்.அப்போது ஏ ஆர் ரஹ்மான் ‘இந்தி’ என்று கேட்டுவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கிச் சென்று ‘நான் உங்க கிட்ட முதலிலேயே கேட்டேன் தமிழ் பேசுவீங்களா’ என்று கூறி சென்ற அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலானது. தற்போதுள்ள நிலையில் ஏர் ஆர் ரஹ்மானின் இந்தப் பதிவும் வைரலாகிறது . மேலும், அமீத்ஷாவின் கருத்து அதற்கு இதுவே பதில் என பலரும் நினைக்கிறார்கள்  ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில்  தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இஸ்லாமிய மக்கள்  உச்சரிக்கும் சொல்லைப் பாடலாகப் பாடினார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்தது.

மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

ஏ.ஆர்.ரகுமான் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி  சென்னையில்  அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது பெயர் அம்மா கஸ்தூரி.அக்கா ஏ.ஆர்.ரெய்கானா.அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ்(நடிகர்).தங்கை பாத்திமா, இஷ்ரத் மற்றும் சகலை ரகுமான்(நடிகர்). இசையுலகப் பயணத்தை 1985 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். நடிகர் மதன் பாப் இவருக்கு ஒரு வகையில் உதவிகள் செய்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். இவரது மனைவி  ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

1992 ஆம் ஆண்டில் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997 ஆம் ஆண்டில் மின்சாரக் கனவும், 2002 ஆம் ஆண்டில் லகான் ஹிந்தி படமும், 2003 ஆம் ஆண்டில் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.

முத்து திரைப்படம் ஜப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 ஆம் ஆண்டில் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.

ரியோ டி ஜனேரோ 2016 ஆம் ஆண்டு ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.  ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியராவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் பாருங்கள் இந்த ஓவியங்கள் பிரபலங்கள் பகிர்ந்தால் தான் பேசும் பொருளாக மாறுகிறது. எல்லாமே பிம்பங்கள் மயம்.     ஏ.ஆர்.ரகுமான் தான் வளரும் போது முழுக்க முழுக்க பான் இந்தியப் படங்களாகப் பணியாற்றியவர் என்பதையும்  நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.  ஏ.ஆர.ரஹ்மான் பற்றி காலம்சென்ற கவிஞர் வாலி குறிப்பிட்ட தகவல் பற்றி சம்யுக்தா  "அவர் பெயரும் தமிழிலில்லை, பிள்ளைகள் பெயரும் தமிழிலில்லை ஆனால் வெற்று கோஷம் போடுகிறார், இவர் மத வெறியைக் கொண்டவர் அடுத்தவர் படத்தில் கூட மத வெறி பார்க்கக் கூடியவரெனத் கூறிய சம்யுக்தா என்பவர் கவிஞர் வாலி குறித்து அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதாவது வாலி வார்த்தை இது ...

'நியூ படத்தில் "காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தெய்வம் அம்மா" என்றே வரிகளை எழுதி இருந்தேன், இறுதி நாளை ரஹ்மான் போன் செய்து தெய்வம் எனக் கூறுவது எங்கள் மதத்திற்கு எதிரானது  வேறு வரியை மாற்ற முடியுமா எனக் கேட்டார், என்னையா இதெல்லாம் ஒரு பிரச்சனை என கூறுகிறாய், சரி தெய்வம் என்பதற்கு பதிலாக தேவதை என வைத்துக் கொள் எனக்குறிப்பிட்டேன். இதை மேற்கோள் காட்டி பாடல் வரிகளில் தெய்வம் என்ற வார்த்தை இடம்பெற்றதை மாற்றிய ரஹ்மான், தமிழைக் காப்பாற்ற போகிறாரா எல்லாம் வேஷம் என கடுமையான பதிலடியை கொடுக்கின்றனர்.

மேலும் ஒருவர் ரஹ்மானை பிறகு ஏன் நீங்கள் ஹிந்தி மொழிப் படத்திற்கு அதிகமாக இசையமைக்கிறீர்கள். இந்திய அளவில் பிரபலமடைய ஹிந்தி மொழியைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். ஹிந்தியை நேரடியாக எதிர்த்தால் வெளிப்படையாக உங்கள் குரலை எழுப்புங்கள்” என குறிப்பிட்டுள்ளார் சந்திரமௌலி என்பவர் தனது பதிவில்“தமிழிலிருந்து அரபு மொழியில் தனது பெயரை மாற்றிக் கொண்டவர். ஆனால், இப்போது தமிழர் என தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் " எல்லாம் வேஷம் என கடுமையாக சாடுகின்றனர் முன்னால் முதல்வர் அறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாதுரையின் வார்த்தை ஒரு விரல் எதிரியை சுட்டிக் காட்ட மறு விரல் நம் மீது  என்பது ரஹுமான் அறியவில்லை.  தமிழ் அன்னையின் உருவம் இது


"இப்படியல்லவா இருந்தாள். இப்படி ஆக்கி விட்டார்களே" என்றெல்லாம் பல ஆதங்கமாய் ஆத்திரக் குரல்கள்.

இதெல்லாம் யாருடைய குரல்கள்?

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணகி போல் வாழ்வியல் முறை கொண்ட சமூகம்

கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டாலும்,ஒரு மூலையில் உட்கார்ந்து மூக்கைச் சிந்தியபடி அமர்ந்து கைம்பெண்ணுக்குரிய வாழ்வை வாழ்ந்து விதி வந்த போது சாகாமல், அத்தனை ஆண்களுக்கு நடுவே விரிசடையுடன் நியாயம் கேட்டு எரித்தவளைப் பார்த்து அய்யோ,வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திடாமல் வாழ்ந்தவளா இப்படி கூந்தலை விரித்துப் போட்டு அலங்கோலமாக நின்று கூச்சலிடுகிறாள் எனனும் சிலரது குரல்கள்.

அவற்றைப் புறந்தள்ளுங்கள்.

தன்மானம் சீண்டப்பட்டால் தமிழணங்கு மட்டுமல்ல நம் வீட்டிலுள்ள அணங்குகளும் கூட விரிசடையுடன்தான் ருத்ர தாண்டவமாடுவார்கள். சந்தேகமிருந்தால் சோதித்துப் பாருங்கள் என்று பலர்           இதில் உள்ள நோக்கம் அவரவர்களின் சார்பு கொள்கை கோட்பாடுகளே இந்த விவாதம். என எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...