வர்த்தக விவாதங்கள் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
அண்டை நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுடன் (பாகிஸ்தான் தவிர) அமைப்புரீதியான இருதரப்பு செயல்முறையை வர்த்தகத் துறை பேணி வருகிறது. வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் பரஸ்பர வசதிக்காக இதன் கீழ் நடத்தப்படுகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பொருளாதார பிரச்சினைகள் இச்சந்திப்புகளில் விவாதிக்கப்படுகின்றன.
எல்லை வர்த்தக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள், சுகாதார நடவடிக்கைகள், சுங்க ஒத்துழைப்பு, ரயில்வே, தரை வழி மற்றும் கடல் துறைமுகங்கள் மூலம் வர்த்தகத்தை எளிதாக்குதல், தரநிலைகளை ஒத்திசைத்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவை ஆக்கப்பூர்வமான பயன்களை அளித்துள்ளன. இந்த நாடுகளுடன் இந்தியாவின் அதிகரித்து வரும் மொத்த வர்த்தகத்தில் இது பிரதிபலிக்கிறது.
கருத்துகள்