திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழிநுட்ப கல்விக்கழகத்தில் யோகா பயிற்சி நிகழ்வு
தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்தின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழிநுட்ப கல்விக்கழகத்தில் மே 10 அன்று தொடங்கி்ய யோகா பயிற்சி நிகழ்வு மே 31 வரை நடைபெற உள்ளது.
21- ஆம் நூற்றாண்டின் முக்கிய திறன்களுடன் ஒவ்வொரு தனி நபரையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த பயிற்சி நிகழ்வு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த யோகி யோகா வகுப்புகளின் இயக்குனரும் யோகா நிபுணருமான திரு யோகேந்திர சிங் குஷ்வா தலைமையில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் ஜி அகிலா தொடங்கி வைத்தார். உடல் மற்றும் மனநலனுக்கு யோகாவின் பயன்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் டாக்டர் என் குமரேசன், திரு டேலி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மூன்று வாரகால யோகா பயிற்சி நிகழ்வில் நாடு முழுவதிலும் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகத்தைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
விளையாட்டுக்கள், உடல் தகுதி ஆகியவை பற்றி புரிந்து கொள்ள செய்வதும் மன அழுத்தத்தை குறைக்க யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும்
கருத்துகள்