முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

8-வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற யோகா கண்காட்சியில் பிரதமர் பங்கேற்றார்


மைசூரில் பிரதமரின் யோகா நிகழ்ச்சியுடன், நாடு முழுவதும் 75 ஐகானிக் இடங்களில் பெருமளவில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

நாடு முழுவதும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களால், கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரிய அளவிலான யோகா நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

மைசூருவில் பிரதமரின் யோகா நிகழ்ச்சி 'ஒரே சூரியன், ஒரே பூமி' என்ற கருத்தை வலியுறுத்தும் ‘கார்டியன் யோகா ரிங்' என்ற புதுமையான முயற்சி

"யோகா என்பது தனிநபருக்கானது அல்ல முழு மனித குலத்திற்கும் ஆனது "

"யோகா நமது சமூகம், நாடு, உலகம் ஆகியவற்றிற்கு அமைதியைத் தருகிறது மற்றும் யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது"

"யோகா தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றலைக் கொடுத்த இந்தியாவின் அமிர்த உணர்வை ஏற்றுக்கொள்வதாகும்"

"இந்தியாவின் வரலாற்று தளங்களில் நடைபெறும் கூட்டு யோகா பயிற்சி அனுபவம் இந்தியாவின் கடந்த காலத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இந்தியாவின் விரிவாக்கத்தையும் ஒன்றாக இணைப்பது யோகா தான் 


8-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். கர்நாடக ஆளுநர் திரு. தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது என்றார். இன்று யோகா உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது, என்று பிரதமர் கூறினார். யோகா என்பது இன்று வீடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருவதை நாம் காண்கிறோம். இது ஆன்மீக உணர்தல் குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவிவந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட மனித உணர்வை மெருகேற்றியது யோகா என்று அவர் கூறினார். “யோகா இப்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது. யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தம் அல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவேதான், இம்முறை சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் - மனிதகுலத்திற்கான யோகா”, என்று பிரதமர் கூறினார். இந்த கருப்பொருளை உலகளவில் எடுத்துச் சென்றதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.





இந்திய முனிவர்களை மேற்கோள் காட்டி பிரதமர், “யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவின் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் யோகா நமது சமூகத்திற்கு அமைதியை தருகிறது. யோகா நமது நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டுவருகிறது. மேலும், யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது.”, என்று கூறினார். மேலும், “இந்த முழுப் பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தான் தொடங்குகிறது. பிரபஞ்சம் நம்மில் இருந்துதான் தொடங்குகிறது. யோகா நமக்குள் இருக்கும் ஆன்மாவை நமக்கு உணர்த்துகிறது மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது", என்று கூறினார்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் ‘அமிர்த பெருவிழாவை’ கொண்டாடும் தருணத்தில் இந்தியா யோகா தினத்தை கொண்டாடுகிறது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். யோகா தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றலைக் கொடுத்த இந்தியாவின் அமிர்த உணர்வை ஏற்றுக்கொள்வதாகும். அதனால்தான், இந்தியாவின் புகழ்பெற்ற, வரலாற்றின் சாட்சியாகவும் கலாச்சார ஆற்றலின் மையமாகவும் விளங்கும், நாடு முழுவதும் உள்ள சிறப்புமிக்க இடங்களில் பெரிய அளவில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. "இந்தியாவின் வரலாற்று தளங்களில் நடைபெறும் கூட்டு யோகா பயிற்சி அனுபவம் இந்தியாவின் கடந்த காலத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இந்தியாவின் விரிவாக்கத்தையும் ஒன்றாக இணைப்பது போன்றது" என்று அவர் கூறினார். தேசிய எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புதமான நிகழ்ச்சியைப் பற்றியும் பிரதமர் விளக்கினார். உலகம் முழுவதும் எப்படி சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ, அதேபோல் பூமியின் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து பார்த்தால், பங்கேற்கும் நாடுகளில் நடைபெறும் பெருமளவிலான யோகா நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக 'ஒரு சூரியன், ஒரே பூமி' என்பது போல் தெரியும். "இந்த யோகா பயிற்சிகள் ஆரோக்கியம், சமநிலை மற்றும் ஒத்துழைப்புக்கு அற்புதமான உத்வேகத்தை அளிக்கின்றன", என்று அவர் மேலும் கூறினார்.





யோகா நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அல்லாமல், இன்று அது நமது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். யோகா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் இடத்திற்குமானது என்று கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.  “நாம் எவ்வளவு மன அழுத்ததில் இருந்தாலும், சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்தி, நமது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. எனவே, யோகாவை கூடுதல் வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாம் யோகாவை அறிந்து கொள்ள வேண்டும், நாம் யோகாவை வாழ வேண்டும். நாம் யோகத்தை அடைய வேண்டும், யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாம் யோகாவை வாழத் தொடங்கும் போது, நாம் தினம் செய்ய வேண்டிய பயிற்சியாக அல்ல, நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டாடுவதற்கான ஒரு ஊடகமாக யோகா மாறும்.” என்று பிரதமர் கூறினார்.

யோகாவுடன் தொடர்புடைய எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேண்டிய தருணம் இன்று, என்று பிரதமர் கூறினார். இன்று நமது இளைஞர்கள் அதிக அளவில் யோகா துறையில் புதிய புதிய  சிந்தனைகளுடன் வருகிறார்கள். ஆயுஷ் அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் யோகா சவால் குறித்தும் அவர் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ‘யோகா மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்கான பிரதமர் விருதுகள்’ வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.




சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவுடன் ஒருங்கிணைத்து 8வது சர்வதேச யோகா தின கொண்டாடுவதற்காக, 75 மத்திய அமைச்சர்கள் தலைமையில் நாடு முழுவதும் 75  சிறப்புமிக்க இடங்களில் பெரியளவிலான யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்சிகளுக்கு பிரதமர் தலைமையில் மைசூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி முன்னோடியாக அமைந்தது. பல்வேறு கல்வி, சமூக, அரசியல், கலாச்சார, மத, பெருநிறுவன மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளால் யோகா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல்வேறு  இடங்களில் நடத்தப்படுகின்றன, இதில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.

தேசிய எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் பங்கேற்ற மைசூர் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2015 முதல், சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் "மனிதகுலத்திற்கான யோகா" என்பதாகும். கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது நமது வேதனையைப் போக்க யோகா மனிதகுலத்திற்கு எவ்வாறு சேவை செய்தது என்பதை இந்த ஆண்டு கருப்பொருள் சித்தரிக்கிறது.யோகா சிறந்த விலையில்லா மருந்து என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்



யோகா சிறந்த விலையில்லா மருந்தாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி காந்தித்திடலில் நடைபெற்ற பெருந்திரள் யோகா பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கையில் யோகா நமது மனதை ஒருமுகப்படுத்துகிறது.  யோகா உடற்பயிற்சியாகவும் மருந்தாகவும் மன அமைதி தருவதாகவும் உள்ளது என்றார்.

இத்தகைய பலன்கள் பலவற்றைத் தருகின்ற யோகாவை  நாம் அனைவரும்  வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிகப் பெரும் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையும் நமது நாட்டில் தோன்றிய அற்புதக் கலையை உலகமே கொண்டாடுமாறு அவர் செய்ததையும்  டாக்டர் எல். முருகன் நினைவுகூர்ந்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநரும், தெலங்கானா துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.2021-ல் யோகாவை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துவதற்கு தலைசிறந்த பங்களிப்புக்கான பிரதமரின் விருதுகள்

2021-ல் யோகாவை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துவதற்கு தலைசிறந்த பங்களிப்புக்கான பிரதமரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது யோகா துறையில் மிகுந்த கௌரவத்துக்குரிய விருதாகும். தனிநபர்கள் பிரிவில் லே, லடாக் பகுதியைச் சேர்ந்த திரு பிக்கு சங்சேனாவும், பிரேசிலின் சாவோ பாலோவை சேர்ந்த திரு மார்க்கஸ் வினிசியஸ் ரோஜோ ரோட்ரிக்ஸ்சும் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  அமைப்புகள் பிரிவில் உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷின் டிவைன் லைப் சொசைட்டியும், பிரிட்டனின் பிரிட்டிஷ் வீல் ஆப் யோகாவும் இந்த விருதுகளை பெறுகின்றன.

 2021-ல் யோகாவை மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்துவதற்கு தலைசிறந்த பங்களிப்புக்கான விருதுகளை 2016 ஜூன் 21-ல் சண்டிகரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச யோகா தின நிகழ்வில் பிரதமர் அறிவித்தார். இந்த விருதுகளுக்கான விதிமுறைகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டன.

 யோகா விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள்  மைகவ் இணையப்பக்க விளம்பரத்தின் மூலம் பெறப்பட்டன.  2021 மார்ச் 29 தொடங்கி மே 11 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  120 விண்ணப்பங்கள் ஆயுஷ் துறையின் செயலாளர் தலைமையிலான பரிசீலனை குழு முதல்கட்ட பரிசீலனையை நடத்தியது. பின்னர் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான நடுவர் குழு தனி் நபர்கள் மற்றும்  நிறுவனங்கள் பட்டியலை தயாரித்தது.

 வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றுடன் பாராட்டப்பட்டனர்.அயோத்தியின் ராம் கீ பைய்டில், நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ் தலைமை வகிக்கிறார்

8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, கர்நாடகாவின் மைசூரு அரண்மனையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார். பிரதமரின் உரை டிடி நேஷனல் மற்றும் டிடியின் பிற அலைவரிசைகளிலும் காலை 6.40 மணியிலிருந்து 7.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

“75-வது ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழா”வின் ஒருபகுதியாக, 75 முக்கிய இடங்களில் 8-வது சர்வதேச யோகா தினக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்ஒரு பகுதியாக, அயோத்தியின் ராம் கீ பைய்டிலும் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ், அயோத்தியாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். உத்தரப்பிரதேச மாநில துணைமுதல்வர் திரு.கேஷவ் பிரசாத் மவுரியாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

சர்வதேச யோகா தினம் 75 முக்கிய இடங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், 'இந்தியா மீதான உலகளாவிய பார்வை'யை மையப்படுத்துவதாகவும் அமையும். 

முதல் சர்வதேச யோகா தினம் 2015-ம் ஆண்டு ஜூன் 21 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.  சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்துக்கான தீர்மானத்துக்கு, 2014 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது. 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சமூகத்தை ஒன்றிணைக்க உதவுகிறது யோகா : மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி

சமூகத்தை ஒன்றிணைக்க உதவுகிறது யோகா என்று மத்திய  கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோயில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) வளாகத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர், நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஒருங்கிணைக்க தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது என்றார். பண்பாட்டு சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோயில் பின்னணியில் பெரும் திரளான மாணவர்கள் உள்ளிட்ட  அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

யோகாவை உடற்பயிற்சியாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதில் உள்ள சஞ்சலத்தை, பிரம்மையை அகற்றி, மனதிற்கு தெளிவை ஏற்படுத்தவும் யோகா பயன்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  நமது கடமையை, செயல்பாட்டை திறமையுடன் அறிவுபூர்வமாக நிறைவு செய்ய  பயன்படுவது யோகா என்றும் அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறினார்.

சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு முன்முயற்சி மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி சார்பில் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், நமது நாட்டின்  பெருமை மிகுந்த தொன்மையான பண்பாட்டை வெளிப்படுத்தும் யோகா இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்  பேராசிரியர் எம் கிருஷ்ணன்,  உணவு பதன தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம் லோகநாதன், கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தின் யோகாச்சாரியார்  எஸ் ஸ்ரீதரன், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்பார்வையாளர்  டாக்டர் ராமகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி யோகாசனம் செய்தார்

நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டினைக் கொண்டாடி வருவதால் நாடு முழுவதும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான  இடங்களில் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன்21)  கொண்டாடப்பட்டது. இவற்றில் மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும்  வெளியுறவுத் துறை இணை அமைச்சர்  திருமதி மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.

விவேகானந்தர் தவம்  செய்ததை நினைவுகூரும் வகையில் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்றிருந்த அமைச்சர், விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை  செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார்.

 இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்தா மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு யோகாசனங்களை செய்தார். பின்னர்  நிகழ்ச்சியில் பேசிய  திருமதி மீனாட்சி லேகி, பிரதமர் திரு நரேந்திர மோடி முயற்சியால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.

 யோகா செய்வதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைக்கப்படுகிறது என்றும், தொடர்ந்து யோகாசனம் செய்வதன் மூலம் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.  நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும் என்று கூறிய அவர், மிகப்பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார் என்றார். நாட்டின் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த  சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்திற்காக, நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், மத்திய கலாச்சாரத்துறை இணைச்செயலர் திரு சஞ்சிக்குட முத்கல், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  திரு அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு டி.என். ஹரிஹரன் பிரசாத், மத்திய நினைவு சின்னங்கள் இயக்குனர்  திரு நவரத்தின கே ஆர் பதக், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் திரு அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு