இந்தியாவில் உண்மையான வரலாறு எழுதப்படும் காலம் கனிவதாக மத்திய உள்துறை அமைச்சர் பேச்சு.
உண்மைகளின் அடிப்படையிலான வரலாற்றைப் பொதுமக்களுக்கு முன் வைக்க வேண்டும், இது பொய்களைத் தானாகஅழிக்கும். வரலாறு வெற்றி தோல்வியின் அடிப்படையில் எழுதப்படவில்லை, மாறாக அந்த நிகழ்வுகளை மையப்படுத்தி முடிவின் அடிப்படையில் தான் எழுதப்பட்டது. அரசு மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் வரலாறு உருவாக்கப்படவில்லை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் தான் வரலாற்று நூல்கள் உருவாக்கப்படுகிறது. தாய்நாடாகக் காக்கப் பல துணிச்சலான வீரர்கள், மன்னர்கள் மற்றும் மகாராஜாக்கள் வெளிநாட்டு படையெடுப்பிற்கு எதிராகப் போராடினர். பல வம்சங்கள் மண்ணுக்காகப் பல தலைமுறைகளாகப் போராடியிருக்கின்றன. இந்த புத்தகம் நமது பெரிய முன்னோர்களின் வீரம் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான படியாகும் வரலாறு அதை எழுதுபவர்களின் கருத்துக்கள் மற்றும் பார்வையின் அடிப்படையில் இல்லாமல் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது ஒரு பொதுவானதொரு முயற்சியாக இருக்க வேண்டும். அரசு விருப்பம் அல்லது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது. 1,000 ஆண்டுகளாக நமது கலாசாரம், மொழி மற்றும் மதத்திற்கான போராட்டம் வீண் போகவில்லை. இன்று நாடு மீண்டும் மரியாதையுடன் நிற்கிறது. இந்திய வரலாற்றில் ஏற்படும் திரிபுகள் குறித்து நாங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் நான் கேட்கிறேன். ஏன் தொடர்ந்து புகார் சொல்ல வேண்டும். நாம் புதிய வரலாற்றை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது.நமது வரலாற்றை உண்மையுடனும், நமது கண்ணோட்டத்துடனும் எழுத முயன்றால் அது தாமதமாகாது. இந்தப் போர் உடனடியாக முடிந்துவிடாது. ஆனால் நம் வரலாற்றை அனைவருக்கும் முன் வைப்பது அவசியம். ஹல்திகாட்டி போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் தேவயூர் போர் வரலாற்றில் எங்கும் பேசப்படவில்லை. அனைத்து மக்கள் முன்னிலையிலும் உண்மையைக் கொண்டு செல்லும் பணியை நாம் செய்ய வேண்டும்.
எந்தவொரு சமூகமும் தனது எதிர்காலத்தைப் பிரகாசமாக்க வேண்டுமானால், அதன் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும். இருப்பினும் கடந்த காலத்தில் நாட்டில் விரக்தியான சூழலை உருவாகும் வகையில் சிலர் வரலாற்றை எழுதினார்கள். ஆனால் இந்த பாரத பூமி விரக்தி நிலைக்க ஒரு பூமியாகும். இந்நூலைக் கூர்ந்து கவனித்தால் பல விஷயங்கள் புலப்படும். எங்கள் வரலாறு கூட இதுவரை எங்களுக்குச் சரியாகத் தெரியாதபடி வரலாற்றாசிரியர்கள் சிலர் முகலாயப் பேரரசைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.
ஆனால் பல இந்திய மன்னர்களின் புகழ்பெற்ற ஆட்சியைப் பற்றி போதுமான அளவு குறிப்பிடவில்லை. பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது, அஹோம் பேரரசு அஸ்ஸாமை சுமார் 650 ஆண்டுகள் சுதந்திரமாக வைத்திருந்தது. அஹோம்கள் கில்ஜி முதல் ஔரங்கசீப் வரை அனைவரையும் தோற்கடித்தனர். தென்னிந்தியாவின் பல்லவ வம்சம் சுமார் 600 ஆண்டுகள், சாளுக்கியர்கள் 600 ஆண்டுகள், மௌரிய வம்சம் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை வரை சுமார் 550 ஆண்டுகள், சாதவாகனர்கள் 500 ஆண்டுகள் மற்றும் குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்' இதை மறைத்து பல வரலாறு பேசப்படுகிறது" எனத் தெரிவித்ததுடன் உண்மையான வரலாறு எழுதப்படும் காலம் கனிகிறது.
கருத்துகள்