வியாபாரங்களில் அதிக அளவில் மோசடி நடப்பது தங்க வியாபாரம். தங்கம் வாங்குவோரை சில நேரங்களில் யோசிக்க வைக்கிறது
இந்தக் குற்றச்சாட்டுகளில் நிஜமிருக்கும் பட்சத்தில் மக்களுக்கு அது குறித்த கவலைகள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் நகைக்கடைகளில் தேனீக்களைப் போல் மக்கள் கூட்டம்.
பதிக்கப்பட்ட கல்லுக்கும் தங்கத்தின் எடை கொண்ட விலையை வாங்குகிறார்கள்
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் எனும் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் என வியாபார விதிமுறை மீறல்கள் நாற்பது கிராம் ஹால்மார்க் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் கல்லுக்குக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம் மக்களிடம் வாங்கி விடுகின்றனர். ‘தங்கத்தின் விலையும் கல்லின் விலையும்’ சமமானவை அல்ல. இதை வர்த்தக அமைச்சகம் வியாபார ஒழுங்கு முறை சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தால் அன்றி மக்கள் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை தான் காலகாலமாக நீட்டித்து வருகிறது, இரண்டுக்குமிடையே எட்ட முடியாத வித்தியாசமுண்டு.
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மிகப்பெரிய மோசடி. ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசமென்று கூறி மக்களை மேலும் குழப்பமாக விளம்பரங்கள் செய்து பெரிய நிறுவனங்கள் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு ‘கல்லுக்கு தனியாகவும்’ பணத்தை வாங்கி ‘இரட்டை மோசடியும்’ செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் ‘கல்லை அப்புறப்படுத்தி விட்டு’ தங்கத்தை மட்டும் எடை போட்டுத் தானே பணம் தருகிறார்கள். வாங்க விற்க இருவேறு நிபந்தனைகள் இருக்க முடியாது இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா எனத் தெரியவில்லை. இதில்
இரண்டாவது மோசடி எனப் பார்த்தால்
சொக்கத் தங்கம் எனப்படும் 24 கே எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு எனும் பித்தளை கலந்தால் தான் நகை செய்ய முடியும். ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM எனச் சொல்லப்படுகிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு எனும் பித்தளை சேர்த்து விட்டு 1000 கிராம் அதில் பித்தளை கலந்த தங்கத்துக்கும் தங்கத்தின் விலை போடப்பட்டு வாங்கப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ள நிலை போக
மூன்றாவது மோசடியாக
தங்கத்துக்கு இன்றைய காலத்தில் ‘இரண்டு விலை’ உள்ளது.
ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில்
தயார் செய்வதற்கான கூலியாகும்.
ஐந்து பௌன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால், ஐந்து பௌன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு ‘சேதாரம்’ என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.
அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.
அதாவது ஐந்து பௌனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் வாங்கி விடுகிறார்கள்.
நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரமாவது கிடையாது என்பது பொற்கொல்லர்
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூகள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் மெழுகு மூலம் எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி நடக்கிறது. இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை. அவர்களுக்குள் ஒரு சின்டிகேட் உண்டு
அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரமெல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை.
அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டும் தானே, அப்படிக் கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தரும் நிலையில் இதுவும் பகல் கொள்ளை தான்
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களில் நிஜமில்லை எனில் தங்க நகை விற்பனையாளர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்து மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக விளக்கம் தரலாம். விளக்கமும் நமது இதழில் வெளியிடப்படும். அதிகமாக விளம்பரங்கள் செய்யும் லலிதா ஜுவல்லரி போல பல நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு கடை எப்படி உருவானதும்,வட மாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள் மற்றும் நம்நாட்டில் ஒரு குறிப்பிட்ட தெலுங்கு பேசும் மக்கள் மட்டுமே இந்த வியாபாரிகள் நடத்தும் நிலையில்
தங்கம் பற்றி சரியான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை . சில போலியான விளம்பரங்கள் சேதாரம் இத்தனை சதவீதம் என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை நிலை தான் என்ன ?ஒரு பவுன் தங்கச் சங்கிலி செய்ய
1.5 கிராம் செம்பு அதாவது பித்தளை சேர்த்தால் மட்டும் தான் நகை செய்ய முடியும். இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால்
8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராமில் உள்ள தங்கம் மட்டுமே நகை செய்யப்படுகின்றது. ஆனால் சாமானிய மக்கள் நகை வாங்கும்போது 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அதாவது பித்தளை இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் GST சேர்த்து போடுகின்றார்கள். அது மட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பாகிய பித்தளை தங்கம் எனக் கூறி சேர்க்கப்பட்டதாக பொய் கூறி செம்பை தங்க விலைக்கே விற்கின்றார்கள். இதில் நாம் சொல்லுவது என்ன வென்றால் 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டுமில்லாமல் 3 கிராம் செம்பையும் சேர்த்து தங்கத்தின் விலையை பித்தளைக்கும் சேர்த்து போட்டு விற்பனை செய்து விடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு வாங்கும் நபர்கள் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் இந்த நகைக் கடைகாரர்கள்.ஆக இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தால் நிச்சயம் நடவடிக்கை வரும். ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் நகை வணிகத்தின் மோசடி நபர்கள் ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நாம் மேலே கூறிய கணக்குதான் உண்மை நிலை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை .... பவுனுக்கு 3 கிராம் என் ஏமாற்றி வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை .....? கணக்கு !
1 கிராம் தங்கம் ரூ. 3765/-
8 கிராம் தங்கம் ரூ. 30,120/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 அல்லது 7/-
6.5 கிராம் தங்கம் - 24,472/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-24,472+7=24,479/-
1 பவுனுக்கு தங்கத்தில் - 30,120 - 24,479
லாபம்= 5,641
சேதாரம் 1.5 கிராம் = 5647/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 11,288 ரூபாய் வியாபாரம் செய்த நபருக்கு இலாபம். நமக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை நிச்சயமாகக் குறையும். விழிப்புணர்வு ஏற்படுத்த எதுவும் மக்களால் முடியும். மக்களால் மட்டுமே முடியும். ."மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து"
சிலப்பதிகாரம்:16: 215-17) "பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்" (சிலப்பதிகாரம்: 20: 74-75)
கருத்துகள்