திறந்தவெளி நிலப்பரப்பு உரிமம் திட்ட ஏலத்தின் எட்டாம் சுற்று தொடக்கம்
சர்வதேச போட்டி ஏலத்திற்கான பத்து தொகுதிகளின் திறந்தவெளி நிலப்பரப்பு உரிமம் திட்டத்தின் எட்டாம் சுற்றை ஜூலை 7-ஆம் தேதி அரசு தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 6, 2022 அன்று 12 மணி வரை பிரத்யேக மின்-ஏல இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் கூடுதலாக 36,316 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஆய்வுக்குள் கொண்டு வரப்படும். மொத்த பரப்பளவு 2,44,007 சதுர கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்படும்.
ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை, மார்ச் 2016-இல் அங்கீகரிக்கப்பட்டது. அப்போது முதல், திறந்தவெளி நிலப்பரப்பு உரிமம் திட்ட ஏலத்தின் ஏழு சுற்றுகள் நிறைவடைந்திருப்பதோடு, 18 வண்டல் படுகைகளில் 2,07,691 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 134 ஆய்வு மற்றும் உற்பத்தி தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
வருவாய் பகிர்வு ஒப்பந்த மாதிரியை பின்பற்றும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை, இந்திய ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்துவதை நோக்கிய மிகப்பெரிய நடவடிக்கையாகும்.
கருத்துகள்