சுரங்கங்கள் அமைச்சகம் கனிம ஆய்வுப் பணியில் மேலும் தனியார் நிறுவனங்களை ஈர்ப்பதில் மத்திய அரசு ஆர்வம் கொண்டுள்ளது – பிரலாத் ஜோஷி
கனிம ஆய்வுப் பணியில் மேலும் தனியார் நிறுவனங்களை ஈர்ப்பதில் நீடித்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய நிலக்கரி, கனிம வளம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கூறியுள்ளார். ட்ரோன்கள் மற்றும் இதர நவீன தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தாக்கம் இல்லாமல் கனிம வள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய எஃகு அமைச்சகம் மற்றும் கனிம வள அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அவர், நிலக்கரி சுரங்கங்களை வனிக ரீதியில் பயன்படுத்த ஏதுவாக ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் கடந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக கூறினார். இந்த வருவாய் ஈட்டலில் ஒடிஷா மாநிலம் முன்னணியில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே இயங்கிவரும் சுரங்கங்கள் மூலம் இந்த ஆண்டு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியின் அளவு 140 மில்லியன் டன்னை எட்டும் என்று திரு ஜோஷி தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் 89 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி சாதனை அளவான 900 மில்லியன் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்