சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு
சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகியது
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தை வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் கையெழுத்திட உள்ளன. புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் நாளந்தா கலையரங்கில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக இந்த இரு அமைச்சகங்கள் எடுத்துள்ள இந்த முன் முயற்சியானது, நமது சமுதாயத்திற்கு புதிய பாதையை அளிப்பதோடு, மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமை, மரியாதையுடன் சமூகத்தில் சிறப்பான இடத்தை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற இந்திய அரசு வழங்கியுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான சான்றிதழ் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான தேசிய தளத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மேலும், மத்திய / மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற திட்டத்தால் பயனடையாத மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள்