நிலங்களின் வழிகாட்டி மதிப்புகளை, 200 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில், 2012 ஆம் ஆண்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டதில் காணப்பட்ட குறைபாடுகளைச் சரி செய்ய, 2017 ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
தற்போது ஐந்து ஆண்டுகளான நிலையில், வழிகாட்டி மதிப்புகளை சீரமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை, தமிழகத்தின் பதிவுத் துறை துவக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கமிட்டி இன்னும் அறிவிக்கப்படவில்லை பதிவுத் துறையில் முறையாக, மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து, வருவாய்த் துறை ஆலோசனையுடன் வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவது வழக்கம்.
பின், அவ்வப்போது ஏற்படும் தேவை அடிப்படையில், மதிப்புகளை உயர்த்தவும், குறைக்கவும், பதிவுத் துறை டி.ஐ.ஜி.,க்களுக்கு அதிகாரம் உள்ள நிலையில். அதைப் பயன்படுத்தி, மாவட்ட வாரியாக உயர் மதிப்புப் பத்திரங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன. உயர் மதிப்பை உறுதி செய்வதற்காக, புதிய வகைப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
பின்னர் அப் பகுதிக்கு வழிகாட்டி மதிப்பு, 200 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.உதாரணமாக, ஒரு கிராமத்தில் ஒரு ஏக்கர், நான்கு லட்சம் ரூபாய் என வழிகாட்டி மதிப்பில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், வங்கிக் கடன் பெறும் நோக்கத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஏக்கர் கைமாறுவதாக பத்திரம் பதிவு செய்திருப்பார்.
அதை அடிப்படையாக வைத்து, புதிய வகைப்பாட்டை உருவாக்கி, அந்த பகுதியில் அனைத்து சொத்துக்களுக்கும், ஏக்கர், 10 லட்சம் ரூபாயாக வழிகாட்டி மதிப்பு மாற்றப்படுகிறது. மாவட்டப் பதிவாளரிடமிருந்து இதற்கான பரிந்துரை, டி.ஐ.ஜி.,க்கள் வாயிலாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது.
அங்கு நான்கு பேர் குழு, இந்த மதிப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து, கணினியில் பதிவேற்றம் செய்ய பரிந்துரைக்கிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பதிவு மாவட்டத்துக்கு, 100 இடங்கள் வீதம் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்படுகின்றன. இந்த மதிப்புகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. ஆனால் உண்மையில் விற்பனை விலையை விட வங்கிகள் வழங்கும் கடன் பெற வேண்டுமென்றே அதிகம் போட்டு தனது சுய தேவைக்காக பதிவு செய்யும் சிலரால் சாமானியார்கள் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் மனை இடமாக மாற்றம் செய்யும் ரியல் எஸ்டேட் தோழில் நடத்தும் வர்த்தக RERA படி வரும் நிறுவனங்கள் மட்டுமே இதன் மூலம் பலனைடையும். உள்ளூர் அளவில் விற்பனையாகும் நிலங்கள் வாங்கும் நபர்கள் இதனால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கருத்துகள்