மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராம ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடும்பத்திற்கு குலதெய்வமாகிறது. அந்த வகையில், தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தந்தை ச.ஜெயராமனின் வழி குலதெய்வ கோயிலாகும் அவரது உதவியுடன் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்ட, புதிதாக கோவிலின் கொடிமரம், விநாயகர், ராகு, கேது, ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும்,
33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக யாகசாலை பூஜைகளும் நடந்தது. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகளையடுத்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள, தாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது.
முதல்வர் குடும்பத்தினர், புனித நீர் அடங்கிய கலசங்களுடன் முன்பு கோவிலை வலம் வந்து பக்தர்களுடன் வழிபாடு செய்தனர்.
கருத்துகள்