புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் திரு பிரஜ் பாசி லால் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் திரு பிரஜ் பாசி லால் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“திரு பிபி லால் ஒரு சிறந்த ஆளுமை. கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறைக்கு அவர் செய்த பங்களிப்புகள் இணையற்றவை. நமது வளமான கடந்த காலத்துடனான தொடர்பை ஆழப்படுத்திய மகத்தான அறிவுஜீவியாக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.”
கருத்துகள்